கம்பராமாயணம் 387 · பால 7.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நாண்மையே உடையார்ப் பிழைத்தால் நகை - நாணம் முதலான பெண்மைக் குணம் உடையவர்களுக்குத் தீங்குசெய்தால் அது கண்டு வீரம் மிக்க ஆடவர் நகைத்துப் பரிகசிப்பர்; வாண்மையே பெற்ற வன்திறல் ஆடவர் தோண்மையே - வாள்முதலான போர்க் கருவிகளில் வல்ல வலிமைமிக்க வீரர்களான ஆண்களின் தோளாற்றலும்; இவள் பேர் சொலத் தோற்கு மேல் - இத்தாடகையின் பெயரைச் சொல்லக் கேட்டவுடன் தோற்று விடுமென்றால்; ஆண்மை என்னும் அது ஆரிடை வைகும் - ஆண்மை என்று கூறும் அந்த அஞ்சாத பண்பு யாரிடம் இருக்கும். (சிந்தித்துப்பார் என்றபடி.
நாண்மை: நாணம். உடையார்: உடையாரை. பிழைத்தால்: தவறுசெய்தால். நகை: சிரிப்புக்கிடமாகும். வன்திறல்: வலியதிறமை. தோண்மை: தோளாற்றல் ஆண்மை யாரிடம் இருக்கும்? பெண் வடிவுடைய இவளிடமா? இவள் பெயரைக் கேட்டதும் தோற்கும் ஆண்களிடமா? என்று கேட்டான் விசுவாமித்திரன் என்பது கருத்து. வைகும்: தங்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To wrong those who have only modesty is a thing for scorn;
- but if the shoulder-strength of mighty men
- who have mastered the sword gives way at the mere mention of her name,
- then where does what is called manliness reside?
What the poem says
The sage presses his argument. Harming a modest, gentle woman would rightly be mocked. But Tāṭakai is not that: even mighty sword-wielding warriors lose their nerve at the sound of her name.
So who here truly has the quality called manliness, she or the men she defeats? Her womanhood is a matter of outward form only.