கம்பராமாயணம் 3882 · கிட்கிந்தா 3.10

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கரன் முதல் கருணை அற்றவர் - (இந்த இராமன்) கரன் முதலான இரக்கமற்ற அரக்கர்களுடைய; கடற் படையொடும் - கடல் போன்ற பதினாலாயிரம் படை வீரர்களோடும்; சிரம் உக - (அவர்கள்) தலைகள் சிதறி விழ; சிலை குனித்து - வில்லை வளைத்து; உதவுவான் - (முனிவர்க்கு) உதவி செய்தவனாவான்; திசை உளார் - இந்திரன் முதலிய திசை காப்பவர்களின்; பரம் உக - துன்பச் சுமை குறையுமாறு; பகை துமித்தருளுவான் - (அறத்திற்குப்) பகையாய் உள்ளவர்களை அழித்து அருளுவான்; பரமர் ஆம் - மேம்பட்டவர்களாகிய; அரன் முதல் தலைவருக்கு - சிவபிரான் முதலான தேவர்களுக்கும்; அதிசயத் திறலினான் - வியக்கத்தக்க வலிமையுடையவனுமாவான்.

கரன் - கடுமை உள்ளவன் என்பது பொருள். 'கரன் முதல் கருணை அற்றவர்' என்பது தூடணன், திரிசிரசு என்னும் இருவரையும் உள்ளடக்கிய அரக்கர் கூட்டம் ஆம். அரக்கர் கருணையற்றவர் என்பதை 'இரக்கம் என்றொரு பொருள் இலாத நெஞ்சினர் அரக்கர்' (2642) என்ற அடியும் உணர்த்தும். இந்திரன் முதலிய திசைக் காவலர் இராவணனால் படும் துன்பமிகுதி தோன்றப் 'பரம்' என்றான். பாரம் - பரம் எனக் குறுகியது. இராமன் அரன் முதலான தேவர்களினும் மேம்பட்ட திறல் உடையவன் என்பதால் 'அதிசயத் திறலினான்' என்றான். 'சூரறுத்தவனும் சுடர்நேமியும், ஊரறுத்த ஒருவனும் ஓம்பினும்..... வேரறுப்பென் வெருவன்மின்' (2652) என இராமனே கூறியுள்ளது காண்க. கடற்படை - உவமை. அறத்திற்குப் பகையாய் உள்ளவர்களை அழிக்கவல்ல பேராற்றல் படைத்தவன் இராமன் என்பதை உணர்த்தி, அறத்திற்குப் பகையான வாலியை அழிப்பதும் உறுதி என்பதைச் சுக்கிரீவனுக்குப் புலப்படுத்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "He bent his bow and helped the sages, so that the heads of Karaṉ and the other pitiless ones
  2. and their sea-like army rolled; so that the burden of the guardians of the directions
  3. might fall away, he graciously cuts down their enemies; his might is a wonder
  4. even to the supreme lords, Araṉ first among them."

What the poem says

Aṉumaṉ goes on: Irāmaṉ, with his bow alone, cut down the pitiless demon Karaṉ, with Tūṭaṇaṉ and Tiricirāvu and their army of fourteen thousand, to protect the sages of the forest. He destroys the enemies of right to lift the burden that Irāvaṇaṉ has laid on the guardian gods of the directions, and his might astonishes even Civaṉ and the other great gods.

The implication for Cukkirīvaṉ: Vālī, too, is an enemy of righteousness, and his end is certain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'karaṉ mutal karuṇai aṟṟavar, kaṭaṟpaṭaiyoṭum
ciram ukac cilai kuṉittu utavuvāṉ; ticai uḷār
param ukap pakai tumittaruḷuvāṉ; paramar ām
araṉ mutal talaivarukku aticayat tiṟaliṉāṉ.