கம்பராமாயணம் 3887 · கிட்கிந்தா 3.15

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தந்திருந்தனர் அருள் ; தகை நெடும் பகைஞன் ஆம்
இந்திரன் சிறுவனுக்கு இறுதி இன்று இசைதரும் ;
புந்தியின் பெருமையாய் ! போதர் ' என்று உரை செய்தான்
மந்திரம் கெழுமும் நூல் மரபு உணர்ந்து உதவுவான் .

பொருள் · Meaning in Tamil

புந்தியின் பெருமையாய் - அறிவில் மேம்பட்டவனே! அருள் தந்திருந்தனர் - (இராமலக்குவர்) நம்மாட்டுக் கருணை வைத்துள்ளனர்; தகை நெடும் பகைஞன் ஆம் - (அதனால்) வலிமை மிக்க பகைவனாகிய; இந்திரன் சிறுவனுக்கு - இந்திரன் மகன் வாலிக்கு; இறுதி - அழிவு; இன்று இசைதரும் - இப்பொழுது நேரிடும்; போதர் - (அதனால் அவர்களோடு நட்புக் கொள்ளப்) புறப்பட்டு வருவாயாக; என்று - என்று; மந்திரம் கெழுமுநூல் மரபு - மன்னர்க்குரிய நீதி நூல்களின் மரபினை; உணர்ந்து உதவுவான் - உணர்ந்து சுக்கிரீவனுக்கு ஆலோசனை சொல்பவனாகிய அனுமன்; உரைசெய்தான் - சொன்னான்.

வாலியை வெல்ல, இராமன் நட்பைப் பெற்றுக் கொள்வதே தக்கது என்னும் அறிவு சுக்கிரீவனுக்கு உண்டு என்பது புலப்படப் 'புந்தியின் பெருமையாய்' என விளித்தான். புந்தி - புத்தி என்பதன் மெலித்தல் விகாரம்; போதர் - போதருக என்பதன் விகாரம். "போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்" (2-9-6) என்ற பெரியாழ்வார் பாசுரம் காண்க. அனுமன் கூறும் ஆலோசனை, அரசியல் மரபிற்கேற்ப அமைந்திருக்கும் என்பதை 'மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான்' என்று கூறி அனுமனைச் சிறப்பித்தார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "They have shown us grace; for the son of Intiraṉ, your mighty,
  2. long-standing enemy, the end will come today;
  3. O you great in wisdom, come!" So said
  4. he who knows the tradition of the books of counsel and gives his help by it.

What the poem says

Aṉumaṉ ends his report with a summons: the brothers are well disposed; Vālī, son of Intiraṉ, will meet his end this very day; Cukkirīvaṉ should come at once and make friends with them.

The poet calls Aṉumaṉ one who knows the books of statecraft and counsels his king by them. By addressing Cukkirīvaṉ as "great in wisdom," Aṉumaṉ assumes he will see that Irāmaṉ's friendship is the right path.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tantiruntaṉararuḷ; takai neṭum pakaiñaṉ ām
intiraṉ ciṟuvaṉukku iṟuti iṉṟu icaitarum;
puntiyiṉ perumaiyāy! pōtar ' eṉṟu urai ceytāṉ
mantiram keḻumu nūl marapu uṇarntu utavuvāṉ.