கம்பராமாயணம் 3888 · கிட்கிந்தா 3.16

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

அன்ன ஆம் உரை எலாம் - (அனுமான் கூறிய) அத்தன்மையனவாகிய சொற்களை எல்லாம்; அறிவினால் உணர்குவான் - தன் அறிவால் அறிந்துணர்ந்த சுக்கிரீவன்; பொன்னையே பொருவுவாய் - (அனுமனை நோக்கி) 'பொன் போன்றவனே! உன்னையே உடைய எற்கு - அறிவில் சிறந்த உன்னையே துணையாக உடைய எனக்கு; அரியது எப்பொருள் - எந்தச் செயல்தான் அரியது? போது - வருவாயாக, எனப் போதுவான் - என்று புறப்பட்டவனாய்; தன்னையே அனையவன் - (தனக்கு வேறு எவரும் ஒப்பில்லாமையால்) தன்னையே ஒப்பவனாகிய இராமனுடைய; சரணம் வந்து அணுகினான் - திருவடிகளை வந்தடைந்தான்.

அனுமன் கூறியதற்கு இசைந்து அவனையும் அழைத்துக்கொண்டு இராமன் இருக்கும் இடத்தைச் சுக்கிரீவன் அடைந்தான். அறிவுடைய அனுமனை அமைச்சனாகப் பெற்ற சுக்கிரீவனுக்கு அரிய செயல் இல்லையாதலின் 'அரியது எப்பொருள்' என்றான். பொன்னையே பொருவுவாய் - அருமை, பெருமை, நயம், ஒளி என்ற சிறப்புகளால் பொன் உயர்வுள்ளதால் அனுமனுக்குப் பொன் உவமை ஆயிற்று. 'பொன் உருக்கொண்ட மேரு' (3781) என அனுமன் குறிக்கப்பட்டது காண்க. 'பொன்னையே பொருவுவாய்' என்பதற்குத் தேவேந்திரனுக்குக் குருவும் அமைச்சனுமாகிய பிரகஸ்பதி போன்றவனே எனப் பொருள் கொள்ளுதலும் தகும். பெரியோரை அடைந்தான் என்னும் பொருளில் திருவடிகளை அடைந்தான் என்பது மரபு. இராமனைச் சரண் அடைந்தான் என்ற குறிப்பும் புலனாகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who grasped with his intelligence all those words
  2. said, "For me, who have you, what thing is hard?
  3. You who are like gold, come!" and setting out,
  4. he came to the feet of the one who has no equal but himself.

What the poem says

Cukkirīvaṉ takes in all that Aṉumaṉ has said and agrees at once: with a counsellor like Aṉumaṉ, nothing is beyond him. He sets out with Aṉumaṉ and comes before Irāmaṉ.

He calls Aṉumaṉ "you who are like gold," praising his worth and brilliance; the words can also mean "like Bṛhaspati," the golden planet and counsellor of the gods. To come to Irāmaṉ's feet is the customary way of saying he came before a great person, but it also hints that Cukkirīvaṉ is taking refuge in him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉaām urai elām aṟiviṉāl uṇarkuvāṉ,
'uṉṉaiyē uṭaiya eṟku ariyatu ep poruḷ arō?
poṉṉaiyē poruvuvāy! pōtu ' eṉap pōtuvāṉ
taṉṉaiyē aṉaiyavaṉ caraṇam vantu aṇukiṉāṉ.