கம்பராமாயணம் 3894 · கிட்கிந்தா 3.22

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கூட்டம் உற்று இருந்த வீரர் , குறித்தது ஓர் பொருட்டு முன்னாள்
ஈட்டிய தவமும் , பின்னர் முயற்சியும் இயைந்தது ஒத்தார் ;
வீட்டு வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்கக் ,
கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார் .

பொருள் · Meaning in Tamil

கூட்டம் உற்று இருந்த வீரர் - நட்பாய் ஒன்றிக் கூடியிருந்த இராம சுக்கிரீவர்; குறித்தது ஓர் பொருட்கு - குறிப்பிட்டு நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு, முன்நாள் ஈட்டிய தவமும் - முற் பிறப்பில் செய்து தேடிக் கொண்ட தவமும்; பின்னர் முயற்சியும் - பின்பு (இப்பிறப்பில் தவப்பயனை அடைய) எடுத்துக் கொள்ளும் முயற்சியும்; இயைந்தது ஒத்தார் - ஒன்று சேர்ந்ததை ஒப்பவர் ஆனார்; மீட்டும் - மேலும்; வாள் அரக்கர் என்னும் தீவினை - கொடிய அரக்கர்கள் என்னும் தீவினையை; வேரின் வாங்க - வேரோடு அழிக்க; கேட்டு உணர் கல்வியோடு - ஆசிரியர்பால் கேட்டு அறிந்த கல்வியோடு; ஞானமும் - தத்துவ ஞானமும்; கிடைத்தது ஒத்தார் - வந்து கூடியதை ஒத்தவரானார்.

இராமனும் சுக்கிரீவனும் சேர்ந்திருந்த தோற்றத்திற்கு அழகிய இரண்டு கருத்துவமைகள் இப்பாடலில் உள்ளன. குறித்த பொருளை அடைவதற்கு முன்னர்ச் செய்த தவமும், இப்பொழுது மேற்கொள்ளும் முயற்சியும் ஒன்று கூடிப் பயன் தருவது போலவும், கல்வியும் ஞானமும் கூடிய வழித் தீவினை ஒழிதல் போலவும் இராம சுக்கிரீவர் நட்பால் அரக்கர் அழிவு நடைபெறும் என்பது கருத்தாகும். 'ஆகூழால் தோன்றும் அசைவின்மை' (குறள் - 371) என்பதால் 'ஈட்டிய தவமும் பின்னர் முயற்சியும்' என அமைத்தார். பல்காலும் கேட்டு அறிய வேண்டுதலின் 'கேட்டு உணர் கல்வி' என்றார்.

'தவமும் முயற்சியும்' முறையே அனகனுக்கும் அரியின் வேந்தனுக்கும் நேர் நிரல்நிறையாகவும், "கல்வியும் ஞானமும்" என்பதனை எதிர்நிரல் நிறையாகவும் கொள்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The heroes sitting together were like the penance stored up in former days
  2. and the effort made afterward, joined for the sake of a purpose in view;
  3. and again, to pull up by the roots the evil karma called the sword-bearing demons,
  4. they were like learning gained by listening, joined with true wisdom.

What the poem says

Two more images for the pair. They are like the merit of past penance joined with present effort, the two together bringing a goal within reach. And they are like learning acquired from teachers joined with deep spiritual wisdom, which together uproot evil karma; here the evil to be uprooted is the race of demons.

The commentary pairs the terms: penance goes with Irāmaṉ and effort with Cukkirīvaṉ, while learning goes with Cukkirīvaṉ and wisdom with Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūṭṭam uṟṟu irunta vīrar, kuṟittatu ōr poruṭku muṉnāḷ
īṭṭiya tavamum, piṉṉar muyaṟciyum iyaintatu ottār;
mīṭṭum vāḷ arakkar eṉṉum tīviṉai vēriṉ vāṅka,
kēṭṭu uṇar kalviyōṭu ñāṉamum kiṭaittatu ottār.