கம்பராமாயணம் 3895 · கிட்கிந்தா 3.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயது ஓர் அவதியின்கண் - அவ்வாறு ஒருங்கு கூடியிருந்த சமயத்தில், அருக்கன் சேய் - சூரியன் மகனான சுக்கிரீவன்; அரசை நோக்கி - இராமனைப் பார்த்து; செல்வ - "எல்லாச் செல்வமும் உடையவனே! உலகுக்கு எல்லாம் - உலகம் அனைத்திற்கும்; நாயகம் என்னல் ஆம் - தலைமையான பொருள் என்று சொல்லுதற்கு ஏற்ற; நலம் மிக்கோயை - நல்ல குணங்களை உடையவனான; நின்னை - உன்னை; மேயினென் - யான் வந்து சேர்ந்தேன்; தீவினை தீய நோற்றார் - (எனவே) தீவினை ஒழியுமாறு தவம் செய்தவர்கள்; என்னின் யார்? - என்னைக் காட்டிலும் யார் இருக்கிறார்கள்? (ஒருவரும் இலர்); விதியே நல்கின் - ஊழ்வினையே இவ்வாறு கூட்டி அருளுமாயின்; மேவல் ஆகாது என் - அடைய முடியாதது யாதுளது? (ஒன்றுமில்லை).
சுக்கிரீவன் இராமனை அடைந்தது, தான் முன் பிறவியில் செய்த நல்வினையாலும், ஊழின் செயலாலுமாம் எனக் கூறினான். தீவினை நீங்கத் தவம் செய்தார்க்கு அன்றி இராமனை அடைய முடியாது என்பதால் "தீவினை தீய நோற்றார் என்னின் யார்?" என்றான். நல்லூழ் தனக்கு அப்பேற்றை நல்கியது எனக் கூறுவான். அதைப் பொதுப் பொருளாக்கி 'விதியே நல்கின் மேவல் ஆகாது என்?' என்றான். இது வேற்றுமைப் பொருள் வைப்பு அணி. 'புண்ணியம் பயக்கின்றுழி அரியது எப்பொருளே' (3661) என்ற அடியை ஒப்பு நோக்குக. 'ஆகாதது' என்ற சொல் செய்யுள் நோக்கி ஆகாது என நின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that moment the son of the Sun looked at the prince
- and said, "Who has done more penance to burn away evil karma than I? O lord of fortune, you,
- with goodness enough to be called the master of all the world,
- I have come to; if fate itself grants it, what cannot be attained?"
What the poem says
Cukkirīvaṉ speaks first. To have come into the presence of Irāmaṉ, whose goodness makes him fit to be called lord of the whole world, he must have done more penance than anyone to wipe out his evil karma.
He then turns his own good fortune into a general truth: when destiny grants its favour, nothing is beyond reach, a figure the commentary calls the support of a particular by a general statement.