கம்பராமாயணம் 3898 · கிட்கிந்தா 3.26

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

என்ற அக் குரக்கு வேந்தை - என்று கூறிய அந்தக் குரங்கினத்து அரசனாகிய சுக்கிரீவனை; இராமனும் இரங்கி நோக்கி - இராமனும் மனம் இரங்கிப் பார்த்து; உன்தனக்கு உரிய - உனக்கு உரிய; இன்ப துன்பங்கள் உள்ள - இன்ப துன்பங்களாக உள்ளனவற்றில்; முன்நாள் சென்றன போக - இதற்கு முன் நீ அனுபவித்துக் கழிந்தன தவிர; மேல் வந்து உறுவன - இனி வந்து சேரும் துன்பங்களை; தீர்ப்பல் - நான் நீக்குவேன்; அன்ன நின்றன - இனி வருவனவாகிய இன்பதுன்பங்கள்; எனக்கும் நிற்கும் - எனக்கும் உனக்கும்; நேர் - சமமாகும்"; என மொழியும் நேரா - என்று உறுதிமொழியும் கொடுத்து.

'நேரா' என்னும் ஈற்றுச்சொல் (வினையெச்சம்) மேற்கவியில் 'என்றான்' என்பதனோடு முடியும்.

வாலிக்கு அஞ்சிச் சரண்புக்க சுக்கிரீவன் நிலை கண்டு இராமன் இரக்கம் கொண்டவனாதலின் 'இரங்கி நோக்கி' என்றார். நட்பிற்குச் சிறந்த இலக்கணம் இன்பதுன்பங்களில் பங்கு கொள்வதாகும் என்பதை உணர்த்தும் வகையால் 'அன்ன நின்றன எனக்கும் நிற்கும் நேர்' என்றான். 'உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' (குறள் - 788) என்றதற்கேற்ப 'மேல் வந்துறுவன தீர்ப்பல்' என இராமன் கூறினான். குரக்கு வேந்தை - வேற்றுமையில் மென்தொடர் வன்தொடராயிற்று. தீர்ப்பல் - தன்மை ஒருமை வினைமுற்று, நினக்கு என்பது நிற்கு எனத் திரிந்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Irāmaṉ looked with compassion on the monkey king who had spoken so,
  2. and said: "Of the joys and sorrows that are yours, let those of former days
  3. that are past be gone; those that come hereafter I will end; and all such that remain
  4. shall be shared equally by me and you," and pledging his word,

What the poem says

Irāmaṉ looks on Cukkirīvaṉ with pity and gives his pledge. What is past is past; the troubles that lie ahead he will remove; and from now on every joy and sorrow will be shared equally between them.

The commentary sees here the essence of friendship and quotes the Tirukkuṟaḷ: true friendship rushes to remove a friend's distress as quickly as a hand flies to catch a slipping garment. The sentence continues into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟa ak kurakku vēntai, irāmaṉum iraṅki nōkki,
'uṉ taṉakku uriya iṉpa tuṉpaṅkaḷ uḷḷa, muṉ nāḷ
ceṉṟaṉa pōka, mēl vantu uṟuvaṉa tīrppal; aṉṉa
niṉṟaṉa eṉakkum niṟkum nēr ' eṉa moḻiyum nērā.