கம்பராமாயணம் 3902 · கிட்கிந்தா 3.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இரவி சேயும் - சூரியன் மகனாகிய சுக்கிரீவனும்; இருவரும் - இராமலக்குவரும்; அரிகள் ஏறும் - குரங்குகளுக்குச் சிங்கம் போன்றவனான அனுமனும்; வெம் ஊகச் சேனைசூழ - கொடிய வானரச் சேனைகள் சூழ்ந்து வர; அறம் தொடர்ந்து - தருமதேவதை பின் தொடர்ந்து வந்து; உவந்து வாழ்த்த - மகிழ்ந்து வாழ்த்தவும்; நாகமும் - சுரபுன்னை மரங்களும்; நரந்தக்காவும் - நரந்தம் என்னும் மரங்களின் சோலையும்; நளின வாவிகளும் - தாமரை பொய்கைகளும்; நண்ணி - பொருந்தி; போக பூமியையும் ஏசும் - இன்பத்தை அனுபவிக்கும் போக பூமியாகிய சுவர்க்க லோகத்தையும் இகழ்கின்ற; புது மலர்ச் சோலை புக்கார் - அன்றலர்ந்த மலர்கள் நிறைந்த சோலையை அடைந்தனர்.
அழிந்து போவதாய் இருந்த தன்னை இராமசுக்கிரீவர் நட்புக் காக்க இருப்பதால், தருமதேவதை அவர்களைப் பின்தொடர்ந்து வாழ்த்தியது. சுவர்க்க லோகத்தில் பெறும் இன்பத்தினும் சிறந்த இன்பம் தரும் இடமாதலின் 'போக பூமியையும் ஏசும் புதுமலர்ச்சோலை' என்றார். தன் மாளிகைக்கு அழைத்துச் செல்வோன் ஆதலின் சுக்கிரீவனை முன்னரும், விருந்தினர்களாகச் செல்வதால் இராமலக்குவரை அடுத்தும், அன்பும் அடக்கமும் கொண்டு இராமலக்குவர் பின் செல்லும் அனுமனை அவ்விருவர்க்குப் பின்னும், ஏனைய வானரங்களை அனுமனுக்குப் பின்னும் செல்லுமாறு வைத்துள்ள வைப்பு முறை நயம் பொருந்தியதாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The son of the Sun went, and the two brothers, and the lion among monkeys,
- with the fierce monkey army around them, while Dharma followed, rejoicing and blessing them;
- and among nākam trees and groves of naranta trees and lotus pools,
- they entered a grove of fresh flowers that put even the land of delights to shame.
What the poem says
The procession sets out: Cukkirīvaṉ first, as host; then Irāmaṉ and Ilakkuvaṉ, as guests; then Aṉumaṉ, modestly following them; then the monkey army. The commentary admires the order. Dharma itself follows, rejoicing, since this friendship will rescue it from ruin.
They come to a grove of fresh blossoms, nākam and naranta trees and lotus pools, lovelier than the heavenly world of pleasures.