கம்பராமாயணம் 3903 · கிட்கிந்தா 3.31

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆரமும் அகிலும் துன்றி - (அச்சோலை) சந்தன மரங்களும் அகில் மரங்களும் நெருங்கப் பெற்று; அவிர் பளிக்கு அறை அளாவி - விளக்கம் மிக்க படிகப் பாறைகள் பொருத்தப்பெற்று; நாரம் நின்றன போல் - அவை தண்ணீர் நிறைந்து நின்றவை போல; தோன்றி - காணப்பட்டு (விளங்க); நவமணித் தடங்கள் - நவமணிகளால் அமைந்த பள்ளமான இடங்களின்; நீடும் பாரமும் - நீண்டகரைகளிலும்; மருங்கும் - பக்கங்களிலுமுள்ள; தெய்வத்தருவு - தெய்வத் தன்மையுடைய மரங்களில்; நீர்ப்பண்ணை ஆடும் - நீர் விளையாட்டைச் செய்யும்; சூர் அர மகளிர் - தெய்வ மகளிர்தம்; ஊசல் துவன்றி - ஊஞ்சல்கள் நெருங்கிய; சும்மைத்து - ஆரவாரத்தை உடையது.

சந்தனம் முதலிய சிறந்த மரங்களும், பளிக்கறைகளும் பொருந்தி, தேவமகளிர் இங்குள்ள நீர்நிலைகளில் நீராடி, மரங்களில் ஊஞ்சல் விளையாடப் பெற்ற சிறப்பினை உடையது அச்சோலை எனப்பட்டது. பளிக்கு - பளிங்கு; அறை - பாறை, நாரம் - தண்ணீர்; இது வடசொல்; பாரம் - கரை; பண்ணை - மகளிர் விளையாட்டு; தரு - தருவு என உகரச்சாரியை பெற்று வந்தது, சும்மைத்து - ஒன்றன்பால் குறிப்புவினைமுற்று. தேவ மகளிர் ஊசலாடும் இயல்பினர் என்பதை 'வானவர் மகளிராடும் வாசம் நாறூசல் கண்டார்' (862) என்பதாலும் அறியலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thick with sandal and agil trees, set with gleaming slabs of crystal
  2. that look like standing water, with hollows of the nine gems,
  3. it was loud, on the long banks and all around, with the swings in the divine trees
  4. crowded with celestial maidens who play in the water.

What the poem says

A description of the grove. Sandalwood and agil trees grow thick; slabs of clear crystal shine like pools of still water; there are basins lined with the nine precious gems.

On their banks heavenly maidens come to bathe and play, and the divine trees are hung with their swings, so that the whole grove rings with their laughter.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āramum akilum tuṉṟi, avir paḷikku aṟai aḷāvi,
nāram niṉṟaṉa pōl tōṉṟi, nava maṇit taṭaṅkaḷ nīṭum
pāramum maruṅkum teyvat taruvu nīrppaṇṇai āṭum
cūr aramakaḷir ūcal tuvaṉṟiya cummaittu; aṉṟē.