கம்பராமாயணம் 3904 · கிட்கிந்தா 3.32

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அயர்வுஇல் கேள்விசால் - தளர்வு இல்லாத கேள்வியால் நிரம்பப்பெற்ற; அறிஞர் வேலைமுன் - அறிஞர்களின் கடல்போன்ற கூட்டத்திற்கு முன்; பயில்வு இல் கல்வியார் - கல்விப் பயிற்சி இல்லாதவர்கள்; பொலிவு இல் பான்மை போல் - மேன்மையில்லாது விளங்குதல் போல, குயிலும் மாமணிக் குழுவு சோதியால் - அச்சோலையில் பதிக்கப்பட்ட சிறந்த மணிகளின் திரண்ட ஒளியால்; வெயிலும் - சூரிய ஒளியும்; வெள்ளி வெண் மதியும் - வெள்ளி போன்ற வெண்திங்களின் ஒளியும்; மேம்படா - மேம்பட்டுத் தோன்றவில்லை.

இதனால் அங்குள்ள இரத்தினங்களின் ஒளி சூரிய சந்திரர்களின் ஒளியினுக்கு மிக்க விளங்குவது அறியப்படுகிறது. அயர்வு - ஐயம்திரிபு. கேள்வியானது கல்வி அறிவைப் பெருக்குதலால் 'கேள்விசால் அறிஞர்' என்றார். வேலை - கடல்; கடல் போன்ற அவையை உணர்த்திற்று; உவமை ஆகுபெயர். கற்றார் முன் கல்லார் போல என்பது உவமை. "வாசகம் வல்லார் முன்னின்று யாவர் வாய் திறக்க வல்லார்" (895) "எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம்" (நன்னெறி - 21) என்பன ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the unschooled, who have never studied, lose all their lustre
  2. before a sea of wise men filled with tireless learning,
  3. so before the massed radiance of the great gems set there,
  4. the sunlight and the silver-white moon could not shine out.

What the poem says

The jewels set in the grove blaze so brightly that sunlight and moonlight are outshone there. The poet compares them to unlettered people who fade into insignificance in an assembly of the learned.

The commentary notes similar comparisons elsewhere: who dares open his mouth before masters of speech?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ayarvuil kēḷvi cāl aṟiñar vēlai muṉ,
payilvu il kalviyār polivu il pāṉmai pōl,
kuyilum mā maṇik kuḻuvu cōtiyāl,
veyilum, veḷḷi veṇ matiyum, mēmpaṭā.