கம்பராமாயணம் 3905 · கிட்கிந்தா 3.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏய அன்னது ஆம் - இத்தகைய சிறப்புக்கள் பொருந்திய; இனிய சோலைவாய் - இனிமைமிக்க சோலையிடத்து; மேய மைந்தரும் - சென்றடைந்த இராமலக்குவரும்; கவியின் வேந்தனும் - வானரத் தலைவனாகிய சுக்கிரீவனும்; தூய பூ அணை - தூய்மையான மலரணைமீது; பொலிந்து தோன்றினார் - சிறக்க வீற்றிருந்தவர்களாய்; ஆய அன்பினோடு - பொருந்தியுள்ள அன்போடு; அளவளாவுவார் - பேசலாயினர்.
சோலையிலுள்ள மலர்களால் ஆன பூ அணை பிறவற்றினும் பொலிவு மிக்கதாக விளங்கியதால் 'பூ அணைப் பொலிந்து தோன்றினார்' என்றார்.
அளவளாவுதல் - நெஞ்சம் கலந்து பேசுதல், சோலைவாய் - வாய் ஏழன் உருபு. இராமலக்குவரும் சுக்கிரீவனும் மலரணையில் தம் அன்பொடு உரையாடியமை இப்பாடலில் புலப்படுகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In that lovely grove of such beauty,
- the two princes who had come there and the king of the monkeys
- sat resplendent on a pure couch of flowers,
- and talked together with the love that had grown between them.
What the poem says
In this lovely grove the brothers and Cukkirīvaṉ sit together on a bed of fresh flowers and talk heart to heart, with the affection that has sprung up between them.