கம்பராமாயணம் 3912 · கிட்கிந்தா 3.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கிட்டுவார் பொரக் கிடைக்கின் - போர்கருதி தன் எதிரே வருபவர் கிடைக்கப்பெற்றால்; அன்னவர் பட்ட நல்வலம் - அவர்களிடம் உள்ள நல்ல வலிமையில்; பாகம் எய்துவான் - பாதியைத் தான் அடைவான்; எட்டு மாதிரத்து இறுதி - எட்டுத் திக்கு எல்லையிலும்; நாளும் உற்று - நாள்தோறும் சென்று; அட்ட மூர்த்தி - அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபிரானின்; தாள்பணியும் - திருவடிகளை வணங்குகிற; ஆற்றலான் - ஆற்றலையுடையவன்.
வாலி, தன்னொடு போர்செய்வார் வலிமையில் பாதி தனக்கு வருமாறு சிவன்பால் வரம்பெற்றிருந்தான். இதனை 'இரங்கியான் நிற்ப என் வலி அவன் வயின் எய்த வரம் கொள் வாலிபால் தோற்றனென்' (6177) என்ற இராவணன் கூற்றாலும் அறியலாம். அட்டமூர்த்திகள் - பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், இயமானன் என்பன. இவ்வெட்டையும் திருமேனியாய்க் கொண்டவனாதலின் சிவபிரான் 'அட்ட மூர்த்தி' எனப்பட்டான். நாளும் எட்டுத் திசைகளுக்குச் சென்று சிவன்தாள் பணிந்து வரும் ஆற்றலை உடையவனாதலின் 'ஆற்றலான்' என்றார். வாலிக்குள்ள வரபலமும், தெய்வபக்தியும் இப்பாடலால் உணர்த்தப்படுகின்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If those who come close find him to fight,
- he takes for himself half of the good strength they have;
- every day he goes to the ends of the eight directions
- and worships the feet of the god of eight forms; such is his power."
What the poem says
Two more marvels of Vālī. By a boon he gains half the strength of anyone who comes to fight him, which makes him almost impossible to defeat face to face. Irāvaṇaṉ himself later admits he lost to Vālī for this reason.
And every day Vālī travels to the ends of all eight directions to worship Civaṉ, the god whose body is made of eight forms: the five elements, the sun, the moon, and the sacrificer.