கம்பராமாயணம் 3913 · கிட்கிந்தா 3.41

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கால் செலாது அவன் முன்னர் ; கந்தன் வேள்
வேல் செலாது அவன் மார்பில் ; வென்றியான்
வால் செலாத வாய் அலது , இராவணன்
கோல் செலாது ; அவன் குடை செலாது அரோ .

பொருள் · Meaning in Tamil

அவன் முன்னர் - அந்த வாலியின் வேகத்திற்கு முன்னதாக; கால் செலாது - காற்றுச் செல்லாது; அவன் மார்பில் - அவ்வாலியின் மார்பில்; கந்தவேள் வேல் செலாது - முருகப்பிரானின் வேலும் நுழையாது; வென்றியான் - வெற்றியை உடையவனான அவ்வாலியின்; வால் செலாத வாய் அலது - வால் செல்லாத இடத்தில் அல்லாமல் (வால் சென்ற இடத்தில்); இராவணன் கோல் செலாது - இராவணனது ஆட்சி செல்லாது; அவன் குடை செலாது - அவ்விராவணனது வெற்றிக் குடையும் செல்லாது.

வாலியின் விரைந்த செலவையும், அவனது வன்மை, வென்றிகளையும் இப்பாடல் உணர்த்துகிறது. கால் - காற்று. வலிமையில் சிறந்தவன் வாயுதேவன். அந்தக் காற்றும் வேகத்தில் வாலியின் வேகத்திற்குத் தோற்றுவிடும் என்பது கருத்து. சரவணப் பொய்கையில் ஆறு உருவங்களாய்க் கிடந்து பார்வதிதேவியால் ஓருருவம் ஆக்கப்பட்டமையால் 'கந்தன்' எனப் பெயர்பெற்றான். கந்தவேள் - இருபெயரொட்டு; கந்தனாகிய வேள். வேள் - வேட்கையை உண்டு பண்ணுபவன். இச்சொல் மன்மதனுக்கும் பெயர் ஆதலால் அதனை விலக்குதற்குக் 'கந்தவேள்' என்றார். கிரவுஞ்சம் என்னும் மலையைப் பிளந்த முருகன் வேலும் வாலியின் மார்பைத் துளைக்காது என்பதால் வாலியுடைய மார்பின் வன்மை புலப்படும்.

வென்றியான் - வாலி - இந்திரன் முதலிய எல்லாத் தேவர்களையும் வென்ற இராவணனது கோலும் குடையும் வாலியின் வால் சென்ற இடத்துச் செல்லாது என வாலியின் வீரமிகுதி கூறப்பட்டது. முன் அவ்வாலியின் வாலில் கட்டுண்டு இராவணன் இடர்ப்பட்டவனாதலின், அவ்வாலுக்கு அஞ்சி அவ்விடம் செல்லமாட்டான்; அவ்வாலுக்கே அஞ்சுபவன் வாலியின் தோள்வலிக்கு எதிர்நிற்கமாட்டான் என்பது கருத்து. வாலியின் வாலுக்கு இராவணன் அஞ்சுபவன் என்பதை "வெஞ்சின வாலி மீளான், வாலும் போய் விளிந்தது அன்றே" (5888), 'நிறையடிக் கோல வாலின் நிலைமையை நினையுந்தோறும் பறையடிக்கின்ற அந்தப் பயம்மிகப் பறந்ததன்றே' (4084) என்ற அனுமன், அங்கதன் கூற்றுகளால் முறையே அறியலாம். 'வரங்கொள் வாலிபால் தோற்றனென்' (6177) என்று இராவணன் கூறுவதும் காண்க. பின்னர் வாலியும் இராவணனும் நட்புக்கொண்டனராதலின் இராவணனைக் கொல்வதற்கு வாலியைக் கொல்வது இன்றியமையாதது என்பது புலப்படுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The wind cannot go before him; the spear of Kantaṉ
  2. cannot pierce his chest; except where the victor's
  3. tail does not reach, Irāvaṇaṉ's
  4. sceptre does not run, nor does his royal umbrella go."

What the poem says

More of Vālī's might. Even the wind cannot outrun him; even the spear of Murukaṉ, which split the Krauñca mountain, could not pierce his chest. And the mighty Irāvaṇaṉ, conqueror of the gods, does not dare extend his rule anywhere Vālī's tail can reach.

The commentary explains the jibe: Irāvaṇaṉ was once caught and bound in Vālī's tail and has feared it ever since. Since Vālī and Irāvaṇaṉ later became friends, killing Vālī is a necessary step toward killing Irāvaṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kālcelātu avaṉ muṉṉar; kanta vēḷ
vēl celātu avaṉ mārpil; veṉṟiyāṉ
vāl celāta vāy alatu, irāvaṇaṉ
kōl celātu; avaṉ kuṭai celātu arō.