கம்பராமாயணம் 3927 · கிட்கிந்தா 3.55

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
-
'' '

பொருள் · Meaning in Tamil

என்று - என்று சொல்லி; தானும் - சுக்கிரீவனும்; அவ்வழி - வாலி சென்ற அவ்வழியே; இரும்பிலம் சென்று - அந்தப் பெரிய பிலத்தினுள் சென்று; முன்னவன் தேடுவேன் - வாலியாம் என் தமையனைத் தேடிப் பார்ப்பேன்; அவற் கொன்றுளான் தனை - (அவன் இறந்து போயிருந்தால்) அவனைக் கொன்றவனாகிய மாயாவியை; கொல்வென் - (போர்செய்து) கொல்வேன்; அன்று எனின் - கொல்ல இயலவில்லை எனின்; பொன்றுவேன் - (போரில்) இறப்பேன்; எனா - என்று கூறி; புகுதல் மேயினான் - அப்பிலத்தில் நுழையப் புகுந்தான்.

முன்னவன் என்றது வாலியை. வாலி சென்ற பிலத்தினுள் புகுந்து வாலியைத் தேடுவது, அசுரன் வாலியைக் கொன்றிருப்பின் அவனைக் கொல்வது, அது இயலாவிடின் மடிவது எனச் சுக்கிரீவன் தன் மனத்துணிவை வெளிப்படுத்தினான். பிலத்தினுள் நுழைய மேயது வாலிமாட்டு அவன் கொண்டுள்ள அன்பையும் எடுத்துக் காட்டியது. அவற் கொன்றுளான் என உயர்திணை ஈறு இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலின் விகாரம் உற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "So saying, he himself declared: 'I will go into that great cavern by the same way
  2. and search for my elder brother; the one who has killed him
  3. I will kill; and if not,
  4. I will die,' and he set about going in."

What the poem says

Cukkirīvaṉ, far from seizing the throne, resolved to follow Vālī into the cavern: he would search for his brother, kill the demon if Vālī had been killed, or die in the attempt. He made ready to go in.

His resolve shows his love for his brother. The story continues in the verses that follow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṉṟu, tāṉum, “av vaḻi irum pilam
ceṉṟu, muṉṉavaṉ - tēṭuvēṉ; avaṟ
koṉṟuḷāṉtaṉaik kolveṉ; aṉṟu eṉiṉ,
poṉṟuvēṉ '' eṉā, pukutal mēyiṉāṉ. '