கம்பராமாயணம் 3926 · கிட்கிந்தா 3.54

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அழுது அழுங்குறும் இவனை , அன்பினில்
தொழுது இரந்து ,”'நின் தொழில் இது ; ஆகலால் ,
எழுது வென்றியாய் ! அரசு செய்க '' எனப்
'பழுது இது ' என்றனன் , பரியும் நெஞ்சினான் .

பொருள் · Meaning in Tamil

அழுது அழுங்குறும் - புலம்பி வருந்துகின்ற; இவனை - இச்சுக்கிரீவனை; அன்பினில் தொழுது இரந்து - (நாங்கள்) அன்போடு வணங்கி வேண்டி, எழுது வென்றியாய் - நூல்களில் எழுதத்தக்க வெற்றியை உடையவனே! நின்தொழில் இது ஆதலால் - இளவரசனாகிய நினக்குரிய தொழில் இவ்வரசு செய்தலே ஆதலின்; அரசு செய்க - அரசாட்சியை ஏற்றுக்கொள்வாயாக; என - என்று சொல்ல; பரியும் நெஞ்சினான் - (வாலியின் பிரிவால்) வருந்துகின்ற மனமுடையவனான சுக்கிரீவன்; இது பழுது - இது குற்றமாகும்; என்றனன் - என்று உரைத்தான். இரத்தல் - வேண்டுதல் பொருளில் வந்தது. நெடுநாள் கழிந்தும் வாலி மீண்டுவராததால், வாலிக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டதோ எனக் கருதியவராய், இளவரசனே அரசனுக்குப் பின்னர் அரசு பெற வேண்டும் என்ற முறைமை கருதி 'நின் தொழில் இது ஆதலால்' என்றனர். பழுது இது என்றது - வாலிக்கரிய அரசைத் தான் ஆளுதல் குற்றம் என்றது. இதனால் சுக்கிரீவனுக்கு அரசு புரியும் விருப்பமின்மை புலப்படும்.

எழுது வென்றியாய் - வெற்றித் தூண்களில் எழுதத்தக்க வென்றியை உடையவனே எனவும் பொருள் கொள்ளலாம். 'பழுது இது' என்று சுக்கிரீவன் கூறிய சுருக்கமான விடை 'சுருங்கச்சொல்லல்' எனும் அழகைச் சார்ந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "As he wept and grieved, we bowed to him with love and begged him:
  2. 'This is your duty now; therefore,
  3. O you whose victories are written in the books, rule the kingdom!'
  4. But he, his heart aching, said, 'That would be wrong.'"

What the poem says

As the months passed and Cukkirīvaṉ wept, the ministers, Aṉumaṉ among them, came to him and begged him, as crown prince, to take up the kingship, since it seemed Vālī must be dead.

Cukkirīvaṉ, grieving for his brother, refused in three words: "That would be wrong." He had no wish to rule a kingdom that belonged to Vālī. The commentary admires the brevity of his answer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aḻutu aḻuṅkuṟum ivaṉai, aṉpiṉiṉ
toḻutu irantu,”'niṉ toḻil itu; ātalāl,
eḻutu veṉṟiyāy! aracu ceyka '' eṉa
'paḻutu itu ' eṉṟaṉaṉ, pariyum neñciṉāṉ.