கம்பராமாயணம் 3929 · கிட்கிந்தா 3.57

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அன்ன நாளில் , மாயாவி , அ பிலம் அத்து ,
இன்ன வாயில் ஊடு எய்தும் என்ன , யாம் ,
பொன்னின் மால் வரை பொருப்பு ஒழித்து , வேறு
உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம் . '

பொருள் · Meaning in Tamil

அன்ன நாளில் - அங்ஙனம் சுக்கிரீவன் அரசேற்றுக் கொண்ட அந்த நாளில்; மாயாவி - மாயாவி; அப்பிலத்து - அந்தப் பிலத்திலிருந்து; இன்ன வாயில் ஊடு - இவ்வாயில் வழியாக, எய்தும் என்ன - இங்கு வருவான் என்று அஞ்சி; யாம் - நாங்கள்; பொன்னின் மால் வரை பொருப்பு - பொன் மயமான பெரிய மேருமலையாகிய மலையை மட்டும்; ஒழித்து - விடுத்து; வேறு உன்னு குன்று எலாம் - வேறு மனத்தால் எண்ணக்கூடிய மலைகள் அனைத்தையும், உடன் அடுக்கினேம் - ஒன்று சேரக் கொண்டுவந்து அப்பில வாயிலில் ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கினோம்.

வாலியைக் கொன்ற மாயாவி, சுக்கிரீவனையும் கொல்ல இவ்வாயில் வழியே வருவான் என்ற அச்சத்தால் அவன் வராவண்ணம் பிலவாயிலை அடைத்துவிட்டோம் என்று வாயில் அடைத்ததற்குரிய காரணத்தைக் கூறினான் அனுமன்.

வாலி, தான் வராமல் இருக்கவேண்டி அடைத்ததாகக் குற்றம் சாட்டினான் ஆதலின், இது கூற வேண்டியதாயிற்று.

மேரு மலை நீங்கலாகப் பிறமலைகளை எல்லாம் அடுக்கியதாகக் கூறியது உயர்வு நவிற்சி அணியாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In those days, fearing that Māyāvi would come out of that cave
  2. through this very mouth, we
  3. left aside only the great golden mountain, Mēru, and every other
  4. hill one could think of we piled up together over it.

What the poem says

Aṉumaṉ explains why the cave mouth was sealed. The monkeys feared that Māyāvi, having killed Vālī as they supposed, would come out and kill Cukkirīvaṉ too, so they blocked the opening. Vālī later accused his brother of shutting him in on purpose, which is why this has to be said.

Saying that they piled up every mountain except Mēru is deliberate exaggeration, a figure of speech.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṉa nāḷil, māyāvi, ap pilattu,
iṉṉa vāyiṉūṭu eytum eṉṉa, yām,
poṉṉiṉ māl varaip poruppu oḻittu, vēṟu
uṉṉu kuṉṟu elām uṭaṉ aṭukkiṉēm. '