கம்பராமாயணம் 3930 · கிட்கிந்தா 3.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவ்வழிச் சேமம் செய்து - அந்தப் பிலத்து வழியை (குன்றுகளால் அடைத்து) பாதுகாவலைச் செய்து; செங்கதிர்க் கோமகன்தனை - சிவந்த கதிர்களை உடைய சூரியன் மைந்தனாம் சுக்கிரீவனை; கொண்டு வந்து - அழைத்துக்கொண்டு வந்து; யாம் - நாங்கள்; மேவு குன்றின் மேல்- எங்கள் இருப்பிடமாகிய கிட்கிந்தை மலைமேல்; வைகும் வேலைவாய் - தங்கியிருந்த காலத்தில்; அவனை - அந்த மாயாவியை; அன்னவன்- அவ்வாலி; ஆவி உண்டனன் - கொன்றான்.
வழியை அடைத்த பின்னர்ச் சுக்கிரீவன் அரசனாகிக் கிட்கிந்தையில் தங்கியிருந்தபோது வாலி மாயாவியைக் கொன்றிட்டான் என்பதாம். சேமம் - பாதுகாவல்; உயிரை உண்டனன்- உண்ணப் பெறாததை உண்டதாகக் கூறுவது இலக்கணை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having made that passage secure, we brought
- the prince, son of the red-rayed sun,
- and while we were dwelling on the hill that is our home,
- he, Vālī, took the life of that demon.
What the poem says
With the cave sealed, the monkeys took Cukkirīvaṉ, son of the Sun, back to Kiṭkintai and lived there with him as king. Meanwhile, down in the cave, Vālī killed Māyāvi. "Drank his life" is an idiom for killing.