கம்பராமாயணம் 3931 · கிட்கிந்தா 3.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒளித்தவன் - (பிலத்தில் புகுந்து) ஒளித்தவனாகிய மாயாவியின்; உயிர்க் கள்ளை உண்டு - உயிராகிய கள்ளை உண்டு; உளம் களித்த வாலியும் - மனம் களிப்படைந்த வாலியும்; கடிதின் எய்தினான் - விரைவாகப் பிலத்து வாயிலை அடைந்து; விளித்து நின்று - (வாயில் அடைபட்டிருந்ததால்) சுக்கிரீவனை அழைத்து நின்று; வேறு உரை பெறான்- மறுமொழி ஒன்றும் பெறாதவனாய்; இளவலார் - 'என் தம்பியார்; இருந்து - வாயிலில் இருந்து; அளித்தவாறு நன்று- காவல் செய்தவிதம் நன்று; எனா. என்று சொல்லி...
கள் உண்டார்க்குக் களிப்பை உண்டாக்குதல் போல மாயாவியைக் கொன்ற வெற்றியும் களிப்பைத் தந்ததால் மாயாவியின் உயிரைக் கள்ளாக உருவகித்தான். அந்தக் கள்ளை உண்டால் வாலியின் மனமும் போதையுற்றது. சுக்கிரீவனுடைய உண்மைநிலை அறியாது மயங்கி உணர்ந்தமைக்கு இக்களிப்பே காரணம் என்பதை உணர்த்தவே 'களித்த வாலியும்' என்றான். இளவலார்- பண்படியாகப் பிறந்த பெயர்: அல் - பெயர்விகுதி. இகழ்ச்சி பற்றிப் பலர்பாலாக வந்தது. 'நன்று' என்பதும் நன்றன்று என்ற குறிப்பையே உணர்த்தியது. 'செய்தி காவல் நீ சிறிது போழ்து' என்ற வாலியின் கட்டளைக்குப் பணிந்திருக்க வேண்டியவன், காவலை விட்டதோடு, ட அடைத்தது பொருந்தாத செயல் கப்பட தய்பு 'இருந்து அளித்தவாறு நன்று' என இகழ்வுபடப் பேசினான் வாலி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having drunk the toddy that was the life of the one who hid,
- Vālī, his heart drunk with joy, came swiftly to the cave mouth;
- he called out and stood there, and got no answer; "How well
- my little brother has stayed and kept guard!" he said.
What the poem says
The demon's life is pictured as toddy: killing him gave Vālī the heady joy that drink gives. That intoxication is why he misjudged his brother.
Finding the mouth blocked and no one answering, Vālī speaks with sarcasm. He uses a mock-respectful plural for his younger brother, and "how well" means "how badly". He had ordered Cukkirīvaṉ to guard the entrance a little while, and now finds it blocked against him.