கம்பராமாயணம் 3932 · கிட்கிந்தா 3.60

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

அவன்- அவ்வாலி; வால் விசைத்து- தன் வாலை வேகமாகத் தூக்கி; வான் வளி நிமிர்ந்தென - வானத்தின்கண் பெருங் காற்று எழுந்தாற்போல; கால் விசைத்து - தன் காலை வீசி, கடிதின் எற்றலும் - வேகமாய் உதைத்த அளவில், பெரிய வெற்பு எலாம் - (பிலத்தை அடைத்திருந்த) பெரிய மலைகள் எல்லாம்; நீல் நிறத்து - நீல நிறமுடைய; விண் நெடு முகட்டவும் - ஆகாயத்தின் உயர்ந்த உச்சியை அடைந்தனவும்; வேலை புக்கவும் - கடலில் விழுந்தனவும் ஆயின.

ஆயின எனும் வினை வருவித்துக்கொள்ளப் பட்டது. விசை- வேகம். நீலம் - நீல் என்றது கடைக்குறை. முகட்ட, புக்க என்பன பலவின்பால் குறிப்பு வினையாலணையும் பெயர்கள்.

வாலியின் காலால் உதைக்கப்பட்ட மலைகளில் உயரச் சென்றவை விண்ணின் உச்சியை அடையவும், தாழச் சென்றவை கடலிலும் விழுந்தன.

விசையுடன் ஒன்றைத் தாக்குகையில் விலங்குகள் தம் வாலை வேகமாக நிமிர்த்துக்கொள்ளும் இயல்பு இங்குக் கூறப்பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Lashing his tail, like a mighty wind rising in the sky,
  2. he swung his foot and kicked hard, and at once
  3. some went up to the high dome of the blue heaven,
  4. and some fell into the sea, all those great mountains.

What the poem says

Vālī kicks away the mountains piled over the cave mouth. The ones that flew upward reached the top of the sky and the ones that flew low fell into the ocean. The raised, lashing tail is the natural gesture of an animal about to strike with force.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vāl vicaittu, vāṉ vaḷi nimirnteṉak
kāl vicaittu, avaṉ kaṭitiṉ eṟṟalum,
nīl niṟattu viṇ neṭu mukaṭṭavum,
vēlai pukkavum, periya veṟpu elām. '