கம்பராமாயணம் 3933 · கிட்கிந்தா 3.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவன் - வாலி; ஏறினான் - (பிலத்தினின்று) ஏறியவனாய், எவரும் அஞ்சுற - எல்லோரும் அஞ்சும்படி; சீறினான் - கோபத்தால் சீறிக்கொண்டு; நெடுஞ்சிகரம் எய்தினான் - பெரிய மலை உச்சியை அடைந்தான்; வேறு இல் - மனத்தில் வேறுபாடு இல்லாத; ஆதவன் புதல்வன் - சூரியன் மைந்தனும்; மெய்ம்மை ஆம் ஆறினானும் - உண்மை நெறியில் நடப்பவனுமான சுக்கிரீவன்; வந்து அடிவணங்கினான் - (தமையன்) முன்வந்து அவன் பாதங்களில் வணங்கினான்.
வாலி வேகத்தோடு மலைகளைத் தள்ளிச் சினத்தொடு கிட்கிந்தையை அடைந்தபோது, மனத்தில் களங்கம் இல்லாத காரணத்தால் சுக்கிரீவன் வாலியின் பாதங்களை வணங்கினான். வல்லார் கூறிய நெறிப்படியே ஆட்சியை ஏற்றவன் ஆதலின் 'மெய்ம்மை ஆம் ஆறினான்' என்றார் சுக்கிரீவன் வாலிக்கு அஞ்சி ஒளிய வேண்டிய காரணம் இன்மையால் எதிர்வந்து வணங்கினான்.
வேறுஇல் - மனத்தில் வேறுபாடு இல்லாத; களங்கமற்ற என்பது கருத்து; தான் வேறு, வாலி வேறு என்றிலாத ஒருமித்த மனமுடையவன் எனலும் பொருந்தும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He climbed out; raging so that everyone was afraid,
- he reached the high peak; then the son of the Sun,
- with no difference in his heart, who walks the way of truth,
- came forward and bowed at his feet.
What the poem says
Vālī storms up to Kiṭkintai in anger. Cukkirīvaṉ does not hide, because he has nothing to hide; he comes out and bows at his brother's feet. He is called one who walks the way of truth because he took the throne only as the wise advised. "No difference in his heart" means without guile, or one at heart with his brother.