கம்பராமாயணம் 3938 · கிட்கிந்தா 3.66

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
-

பொருள் · Meaning in Tamil

எந்தை - எம் ஐயனே! அவன் - அவ்வாலி; எயிறு அதுக்குமேல் - தன் பற்களைக் கடித்துக் கோபிப்பானாயின்; அந்தகற்கும் - யமனுக்கும்; ஓர் அரணம் - (பிழைத்துவாழ) பாதுகாப்பான ஓர் இடம்; இல்லை - இல்லை; முந்தை உற்றது - முன்னே (மதங்கமுனிவரால்) அடைந்ததாகிய; ஓர் சாபம் உண்மையால் - ஒரு சாபம் உள்ளதாதலின்; இந்த வெற்பின் வந்து - இந்த மலையில் வந்து; இவன் இருந்தனன் - சுக்கிரீவன் இருப்பானாயினன்.

வாலியின் சினத்திற்கு இலக்கானவர் யாவரேயாயினும் தப்பிப் பிழைப்பதற்கு உரிய இடமில்லை. எல்லா உயிர்களையும் கவரும் யமனுக்கும் பிழைக்க இயலாது என்பதால் வாலியின் வலிமை உணர்த்தப்பட்டது. அந்தகற்கும் - உம்மை, உயர்வு சிறப்பும்மை. எயிறு அதுக்குதல் - கோபக்குறியை உணர்த்தும் மெய்ப்பாடு. காரியம் காரணத்தின் மேல் நின்றது. வாலி, மதங்க முனிவரால் பெற்ற சாபத்தில் இம்மலைப் பகுதிக்கு வரஇயலாது. அதனால் சுக்கிரீவன் இம்மலையை அரணாகக் கொண்டு இதுகாறும் உயிர் பிழைத்திருந்தான் என்பதை உணர்த்தினான் அனுமன். வாலிக்கு மதங்க முனிவர் இட்ட சாபத்தைத் துந்துபிப் படலத்தால் அறியலாம். அந்தகன் - உயிர்கட்கு அழிவைச் செய்பவன், யமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. My lord, once that one grinds his teeth in rage,
  2. there is no refuge even for Death himself;
  3. this one came and has stayed on this mountain
  4. because of a curse that Vālī incurred long ago.

What the poem says

Grinding the teeth is a sign of fury. If Vālī is angry, even Yama, who takes all lives, could find nowhere to hide. Cukkirīvaṉ has survived only because the sage Mataṅkar once cursed Vālī so that he cannot enter this mountain region; the story of that curse is told later, in the Tuntupi episode.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1entai! maṟṟu avaṉ eyiṟu atukkumēl,
antakaṟkum ōr araṇam illaiyāl;
inta veṟpiṉ vantu ivaṉ iruntaṉaṉ -
muntai uṟṟatu ōr cāpam uṇmaiyāl.