கம்பராமாயணம் 3939 · கிட்கிந்தா 3.67

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

எம் கடவுள் - எம் தெய்வமே! உருமை என்று - உருமை என்று பெயர்பெற்று; இவற்கு உரிய - இச்சுக்கிரீவனுக்கு உரிய; தாரம் ஆம் - மனைவியாய் இருந்த; அருமருந்தையும் - கிடைத்தற்கரிய தேவாமிர்தம் போன்றவளையும்; அவன் - விரும்பினான் - அவ்வாலி விரும்பிக் கவர்ந்து கொண்டான்; இவன் - சுக்கிரீவன்; இருமையும் துறந்து - அரசச் செல்வத்தையும் மனைவியையும் இழந்து; இருந்தனன் - இம்மலையில் இருந்தான்; இங்கு இது கருமம் - இங்குக் கூறிய இதுவே நடந்த செய்தியாகும்; என்றனன் - என்று அனுமன் உரைத்தான்.

உருமை - சுக்கிரீவன் மனைவி. வாலி சுக்கிரீவர்களுக்கு மாமனும், தேவகுருவாகிய பிரகஸ்பதியின் மகனுமான தாரன் என்னும் வானர வீரனின் மகள். ருமை என்னும் வடசொல் தமிழில் உருமை ஆயது. அருமருந்தையும் - உம்மை உயர்வு சிறப்பொடு இறந்தது தழுவிய எச்சப்பொருளும் அமைந்தது. வாலி தனக்குரிய ஆட்சியை எடுத்துக் கொண்டதோடு, சுக்கிரீவனுக்கே உரிய மனைவியையும் கவர்ந்தான் என வாலியின் கொடுமை கூறப்பட்டது. அருமருந்து - கிடைத்தற்கரிய தேவாமிர்தம். உவமை ஆகுபெயராய் உருமையைக் குறித்தது. இருமை - அரசாட்சியையும் இல்லற வாழ்வையும் குறிக்கும். இருமையும் - உம்மை முற்றும்மை

'பூவையைப் பிரிந்துளாய் கொலோ' (3820) என இராமன் வினவியதற்கு விடையாக 'ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு' (3821) எனக் கூறத் தொடங்கிய செய்திகள் இந்தப் பாடலொடு முடிகின்றமையின் 'கருமம் இங்கு இது' என உரைத்தான்.

வாலி சுக்கிரீவன் மனைவியைக் கவர்ந்த செய்தியை 'அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப் பெருமை நீங்கினை' (4043) என்ற அடியும் உணர்த்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Urumai by name, who was this one's wife,
  2. rare as the nectar of the gods, that one desired and took;
  3. giving up both kingdom and home, this one has lived here;
  4. this is the whole matter, our god," he said.

What the poem says

Urumai, Cukkirīvaṉ's wife, was the daughter of Tāraṉ, a monkey warrior and son of the gods' teacher Bṛhaspati. Vālī not only took back the kingdom but seized his brother's wife too, so Cukkirīvaṉ has lost both his throne and his home life.

This ends the account Aṉumaṉ began when Irāmaṉ asked whether Cukkirīvaṉ, too, had been parted from his wife; hence "this is the whole matter".

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'urumai eṉṟu ivaṟku uriya tāram ām
aru maruntaiyum avaṉ virumpiṉāṉ;
irumaiyum tuṟantu, ivaṉ iruntaṉaṉ;
karumam iṅku itu; em kaṭavuḷ! ' eṉṟaṉaṉ.