கம்பராமாயணம் 3941 · கிட்கிந்தா 3.69

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

ஈரம் நீங்கிய - அன்பு நீக்கிய; சிற்றவை - சிறிய தாயாகிய கைகேயி; சொற்றனள் என்ன - சொன்னாள் என்று; ஆரம் வீங்கு தோள் - முத்துமாலை அணிந்த பருத்த தோள்களை உடைய, தம்பிக்கு - தம்பியாகிய பரதனுக்கு; தன் அரசு உரிமைப் பாரம் - தனக்கே உரித்தான அரசபாரத்தை, ஈந்தவன் - அளித்தவனான இராமன்; பரிவு இலன் ஒருவன் - "அன்பில்லாத ஒருவன்; தன் இளையோன் தாரம் - தன் தம்பியின் மனைவியை; வௌவினன் - கவர்ந்து கொண்டான்; என்ற சொல் - என்ற வார்த்தையை; தரிக்குமாறு உளதோ - (கேட்டுப்) பொறுத்திருக்கும் தன்மை உண்டாகுமோ? (ஆகாது.

இராமன் மாட்டு இயல்பாக அன்பு கொண்ட கைகேயி கூனியின் சூழ்ச்சியால் மாறியதால் 'ஈரம் நீங்கிய சிற்றவை' என்றார். ஆட்சியுரிமை மூத்தவனான இராமனுக்கே உரித்து ஆதலின் 'தன் அரசுரிமை' எனப்பட்டது. இச்செய்யுளால் தம்பி மாட்டு அன்பில்லாது, அவன் தாரத்தையும் கவர்ந்த கொடிய செயலே மனைவியை இழந்த இராமன் வாலிபால் கொண்ட பகைமைக்கு முதன்மைக் காரணமாய் முன்னின்றது என்பதாம்.

இப்பாடல் கவிக்கூற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who, because a stepmother emptied of love had said so,
  2. gave his own rightful burden of kingship
  3. to his brother of necklaced shoulders, how could he bear the words,
  4. "A loveless one has stolen his younger brother's wife"?

What the poem says

This is the poet speaking. Irāmaṉ himself gave up the throne that was his by right to his younger brother Paratan when Kaikēyi, once loving, was turned against him by the hunchback's scheming. Such a man could never bear to hear of an elder brother who took a younger brother's wife. That cruelty, felt by a man who has himself lost his wife, is the main reason for Irāmaṉ's enmity toward Vālī.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īram nīṅkiya ciṟṟavai coṟṟaṉaḷ eṉṉa,
āram vīṅku tōḷ tampikkut taṉ aracu urimai
pāram īntavaṉ, 'parivu ilaṉ oruvaṉ, taṉ iḷaiyōṉ
tāram vauviṉaṉ ' eṉṟa col tarikkumāṟu uḷatō?