கம்பராமாயணம் 3942 · கிட்கிந்தா 3.70

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

உலகம் ஏழினோடு ஏழும்- பதினான்கு உலகில் உள்ளோர் யாவரும்; வந்து - திரண்டு வந்து; அவன் உயிர்க்கு உதவி - வாலியின் உயிரைக் காப்பதற்கு உதவிபுரிந்து; விலகும் என்னினும் - என்னைத் தடுக்குமாயினும்; வில்லிடை வாளியின் - என் வில்லில் பூட்டிய அம்பினால்; வீட்டி - அவனை அழித்து; தலைமையோடு - வானரங்களுக்குத் தலைவனாகும் அரசாட்சியோடு,; நின் தாரமும் - உனது மனைவியையும்; உனக்கு இன்று தருவேன் - உனக்கு இப்பொழுதே மீட்டுத் தருவேன்; புலமையோய் - அறிவில் சிறந்தவனே! அவன் உறைவிடம் காட்டு - அவன் வசிக்கும் இடத்தைக் காண்பிப்பாய்; என்று புகன்றான் - என்று (சுக்கிரீவனிடம் இராமன்) கூறினான்.

பதினான்கு உலகில் உள்ளார் வந்து தடுப்பினும் வாலியைக் கொன்று ஆட்சியையும், மனைவியையும் மீட்டுத் தருவது உறுதி என இராமன் சுக்கிரீவனுக்கு உரைத்தான். முன் தண்டக வனத்து முனிவர்களிடத்தும் 'சூர் அறுத்தவனும், சுடர்நேமியும், ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும், ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர், வேர் அறுப்பென், வெருவன்மின் நீர்' (2652) என இராமன் கூறியுள்ளமை காணலாம். அரச நீதிக்கு ஏற்பத் துணையையும் காலத்தையும் நோக்கி அடங்கியிருந்த சுக்கிரீவன் அறிவுடைமை பற்றிப் 'புலமையோய்' என விளித்தான். உலகம் - இடவாகுபெயர்; விலக்கும் என்பது எதுகை நோக்கி 'விலகும்' என விகாரப்பட்டு நின்றது. 'இன்று தருவென்' என்றது கால வழுவமைதி; உறுதி குறித்தது. 'இன்றே தந்தேன்' என்று சொல்லியிருந்தாலும் அதுவே.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Even if all fourteen worlds come to help save his life
  2. and stand in my way, I will destroy him with the arrow on my bow
  3. and today give you back your kingship and your wife;
  4. wise one, show me where he lives," he said.

What the poem says

Irāmaṉ vows that even if the beings of all fourteen worlds stood between him and Vālī, he would kill him and restore Cukkirīvaṉ's throne and wife. He made a similar vow earlier to the sages of the Taṇṭaka forest. He calls Cukkirīvaṉ "wise" because he had patiently bided his time, waiting for the right ally and moment. "Today" stresses that the promise is certain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ulakam ēḻiṉōṭu ēḻum vantu avaṉ uyirkku utavi
vilakum eṉṉiṉum, villiṭai vāḷiyiṉ vīṭṭi,
talaimaiyōṭu, niṉ tāramum, uṉakku iṉṟu taruvēṉ;
pulamaiyōy! avaṉ uṟaiviṭam kāṭṭu ' eṉṟu pukaṉṟāṉ.