கம்பராமாயணம் 3947 · கிட்கிந்தா 3.75

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

செறுக்கும் வன்திறல் - யாவரையும் வருத்துகின்ற மிக்க வலிமையை உடைய; திரிபுரம் - முப்புரங்களும்; தீ எழச் சினவி - நெருப்புப் பற்றி எரியும்படி சினங்கொண்டு, கறுக்கும் வெஞ்சினக் காலன் தன் - கோபித்து (மார்க்கண்டேயன் மீது) கொடிய சினங்கொண்ட யமனுடைய; காலமும் - ஆயுள் காலத்தையும்; காலால் அறுக்கும் - காலினால் உதைத்து அழித்துவிட்ட; புங்கவன் - மேலோனான சிவபிரான்; ஆண்ட - கையாண்ட; பேர் ஆடகத்தனி வில் - பெரிய பொன்மயமான ஒப்பற்ற வில்லை; இறுக்கும் தன்மை - முறிக்கின்ற செயல்; அம்மாயவற்கு அன்றியும் - அத்திரு மாலுக்கு அல்லாது; எளிதோ - பிறர்க்கு எளிதாமோ? (ஆகாது).

திரிபுரம் அழித்து, காலனையும் உதைத்த சிவபிரான் பற்றிய வில் என அவ்வில்லின் வலிமையும் பெருமையும் கூறி, அதனை வளைத்தவன் என இராமன் பெருமை கூறியவாறு. சீதையை மணக்க இராமன் வளைத்த வில் சிவன் வில். திரிபுரம் என்னும் கோட்டை அமைந்த மூன்று நகரங்களின் அழிக்கும் வலிமை தெரிய 'செறுக்கும் வன்திறல் திரிபுரம்' என்றான். மார்க்கண்டேயனைப் பற்றிய யமனது சினம் தோன்றக் 'கறுக்கும் வெஞ்சினக் காலன்' என்றான். சிவபிரான் அவனை அழித்த எளிமை தோன்றக் 'காலால் அறுக்கும்' என உணர்த்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The golden, peerless great bow wielded by the Exalted One,
  2. who in wrath set aflame the three cities of crushing might,
  3. and with his foot cut short the time of Death, dark with fierce anger,
  4. could anyone but that Māyavaṉ find it easy to break?"

What the poem says

The bow Irāmaṉ broke to win Cītai was Śiva's own, the bow of the god who burned the three flying cities and kicked Yama to death when Yama, in anger, came for the boy Mārkkaṇṭēyaṉ. Only Viṣṇu (Māyavaṉ, the wondrous one) could break such a bow, so its breaking is proof of who Irāmaṉ is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ceṟukkum vaṉtiṟal tiripuram tī eḻac ciṉavik,
kaṟukkum veñ ciṉak kālaṉtaṉ kālamum kālāl
aṟukkum puṅkavaṉ āṇṭa pēr āṭakat taṉi vil
iṟukkum taṉmai, am māyavaṟku aṉṟiyum eḷitō? '