கம்பராமாயணம் 3953 · கிட்கிந்தா 4.2

Section கிட்கிந்தா காண்டம் / 4. மராமரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மறு இலான் அது கூறலும் , வானவர்க்கு இறைவன் ,
முறுவல் செய்து , அவன் முன்னிய முயற்சியை முன்னி ,
எறுழ் வலித் தடந் தோள்களால் சிலையை நாண் ஏற்றி ,
அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று அணைந்தான் .

பொருள் · Meaning in Tamil

மறுஇலான் - (மனத்தில்) குற்றம் இல்லாதவனாம் சுக்கிரீவன்; அது கூறலும் - அவ்வார்த்தையைச் சொன்னதும்; வானவர்க்கு இறைவன் - தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இராமபிரான்; அவன் முன்னிய முயற்சியை உன்னி - சுக்கிரீவன் எண்ணிய காரியத்தை அறிந்து கொண்டு; முறுவல் செய்து - புன் முறுவல் செய்து; எறுழ் வலித் தடந் தோள்களால் - மிக்க வலிமையுடைய பெரிய கைகளால்; சிலையை நாண் ஏற்றி - வில்லை எடுத்து நாண் ஏற்றி; அறிவினால் அளப்பு அரியவற்று - அறிவினால் அளவிட்டு அறிய முடியாத அம்மரங்களின்; அருகு சென்று - அருகில் சென்று; அணைந்தான் - சேர்ந்தான்.

சுக்கிரீவன் தன் உள்ளத்தில் ஏற்பட்ட ஐயத்தை மறைக்காமல் வெளியிட்டமையால் 'மறுவிலான்' எனச் சிறப்பிக்கப்பட்டான். இராமன் தேவர்களுக்குத் தலைவனாகிய திருமாலின் அவதாரம் ஆதலின் 'வானவர்க்கு இறைவன்' என்றார். இராமனைத் 'தெய்வநாயகன்' (6994) என அங்கதனும், "தேவதேவனைத் தென்னிலங்கை எரியெழச் செற்றவில்லியை" (திருவாய்மொழி - 3-6-2) என நம்மாழ்வாரும் கூறியமை காண்க. இராமன் வலிமைக்கு மராமரம் துளைத்தல் மிக எளிய காரியமாதலின், சுக்கிரீவன் மனத்தில் அச்சத்தால் ஏற்பட்ட ஐயத்தை உய்த்துணர்ந்து இராமன் முறுவல் செய்தான். எறுழ் - வலிமை; எறுழ் வலி - ஒரு பொருட்பன்மொழி. அரியவற்று - 'அற்று' - சாரியை. மராமரங்களின் உயர்வும், பருமையும், பரப்பும் மக்கள் அறிவால் அளக்க முடியாதன ஆதலின் 'அறிவினால் அளப்பரியவற்று' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the blameless one said this, the lord of the gods
  2. smiled, understanding the purpose he had in mind,
  3. strung his bow with his mighty, broad shoulders,
  4. and went up close to those trees that the mind cannot measure.

What the poem says

Cukkirīvaṉ is called blameless because he spoke his doubt openly instead of hiding it. Irāmaṉ, Viṣṇu on earth and so lord of the gods, smiles: piercing a tree is nothing to him, and he sees that the request comes from fear. The trees are beyond the mind's power to measure in height, girth and spread.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟu ilāṉ atu kūṟalum, vāṉavarkku iṟaivaṉ,
muṟuval ceytu, avaṉ muṉṉiya muyaṟciyai uṉṉi,
eṟuḻ valit taṭan tōḷkaḷāl cilaiyai nāṇ ēṟṟi,
aṟiviṉāl aḷappa ariyavaṟṟu aruku ceṉṟu aṇaintāṉ.