கம்பராமாயணம் 3954 · கிட்கிந்தா 4.3

Section கிட்கிந்தா காண்டம் / 4. மராமரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊழி பேரினும் - (அம் மராமரங்கள் யுகங்கள் மாறினாலும்; பேர்வு இல - தம் நிலைமாறுதல் இல்லாதவை; உலகங்கள் - எல்லா உலகங்களும்; உலைந்து தாழும் காலத்தும்- அழிந்து போகும் காலத்திலும்; தாழ்வு இல- விழுந்து தாழ்வடைவன அல்ல; தயங்கு பேர் இருள் சூழ் - திகைத்தற்குக் காரணமான மிக்க இருளினால் சூழப்பெற்ற; ஆழிமா நிலம் - கடல் சூழ்ந்த பெரிய பூமியை; தாங்கிய அருங் குலக் கிரிகள் ஏழும்- தாங்குகின்ற அரிய குல மலைகள் ஏழும்; ஆண்டுச் சென்று - அவ்விடத்தில் வந்து; ஒரு வழி நின்றென - ஒரு சேர நின்றது போல; இயைந்த - அமைந்திருந்தன.

அழியாது நிலைத்து நிற்க வல்லன; பெருந்தோற்றமும் வன்மையும் கொண்டன என மராமரங்கள் ஏழின் சிறப்புகள் கூறப்பட்டன. முன்னிரண்டடிகள் உயர்வு நவிற்சி அணி பொருந்தியது. பற்பல இடங்களில் உள்ள ஏழு மலைகளும் ஓரிடத்தில் வந்து நின்றன என்று சொல்லத்தக்க வகையில் மரங்கள் விளங்கியதால் பெருங்கிரிகள் ஏழும் ஆண்டுச் சென்று ஒரு வழி நின்றென என்றார். ஏழுமலைகளும் ஓரிடத்தில் நிற்றல் இல்லையாதலின் பின்னிரண்டடிகள் இல்பொருள் உவமையணி அமைந்தது. கிரிகள் ஏழு- கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், கந்தமாதனம் என்பன. மலைகள் பூமிக்கு மேலும் கீழும் பொருந்தித் தாங்குவதால், 'மாநிலம் தாங்கிய அருங்குலக்கிரிகள்' எனப்பட்டன. ஊழி பேரினும் தாழும் காலத்தும் - உம்மை உயர்வு சிறப்பு; ஏழும் - முற்றும்மை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though the ages change, they do not move; even when
  2. the worlds are ruined and sink, they do not fall; it was as if
  3. the seven rare great mountains that bear up the sea-girt earth,
  4. wrapped in bewildering darkness, had gone there and stood together in one place.

What the poem says

The poet begins a long description of the seven trees. They outlast the ages and survive even the end of the world. They look like the seven great mountains that hold up the earth, gathered in a single spot, something that never happens, so the comparison is to an impossible thing. The commentary lists the seven as Kailāsa, the Himālaya, Mandara, Vindhya, Niṣadha, Hemakūṭa and Gandhamādana.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūḻi pēriṉum pērvila; ulakaṅkaḷ ulaintu
tāḻum kālattum tāḻvila; tayaṅku pēr iruḷ cūḻ
āḻi mā nilam tāṅkiya aruṅ kulak kirikaḷ
ēḻum, āṇṭuc ceṉṟu oru vaḻi niṉṟeṉa iyainta.