கம்பராமாயணம் 3958 · கிட்கிந்தா 4.7

Section கிட்கிந்தா காண்டம் / 4. மராமரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தீது அறும் - (அம்மரங்கள்) அழிதல் இல்லாத; பெரும் சாகைகள் - பெரிய கிளைகள்; தழைக்கின்ற செயலால் - செழித்து வளர்கின்ற செயலால்; வேதம் என்னவும் - வேதங்கள் என்று சொல்லவும்; தகுவன - தகுதியுடையன; விசும்பினும் உயர்ந்த - (அவை) வான மண்டலத்தினும் உயர்ந்து விளங்குவன; ஆதி அண்டம் முன்பு அளித்தவன் - பழமையான அண்டங்களை முன்னே படைத்தளித்த பிரமனுடைய; உலகின் அங்கு - சத்தியலோகமாகிய அவ்விடத்தில்; அவன் ஊர் - அவன் ஏறிச் செல்கின்ற; ஓதிமம்- அன்னப்பறவை; தனிப் பெடையோடும் - தனது ஒப்பற்ற பெடை அன்னத்தோடு; புடை இருந்து உறைவ - அம்மரங்களின் ஒரு பக்கத்தே இருந்து வாழ இடமாவன.

வேதங்களின் சாகைகள் அழிவற்றனவாயும், அளவற்றனவாயும் இருத்தல் போல மரங்களின் கிளைகளும் அழிவற்றும், அளவற்றும் விளங்குகின்றன என்றார். சாகை என்னும் சொல்லிற்கு வேதங்களின் கிளைப் பகுதி, மரக்கிளை, என்றும் பொருள்கள் உள்ளன. ஆதலால் 'சாகைகள் தழைக்கின்ற செயலால் வேதமென்னத் தகுவன' என்றார். செம்மொழிச் சிலேடை அணி பொருந்தியது. விசும்பின்- இன் எல்லைப் பொருளது. பிரமனுக்குரிய அன்னப் பறவை தங்கிய இடம் என்றதால் அம்மரங்கள் பிரமலோகத்திற்கும் மேல் உயர்ந்து வளர்ந்திருந்தன என்பதாம். இஃது உயர்வு நவிற்சி அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because their great, flawless branches flourish,
  2. they could well be called the Vedas; they rise above the sky;
  3. in the world of the one who first made the ancient cosmos,
  4. the swan he rides lives beside them with its matchless mate.

What the poem says

The pun is on cākai, which means both the branch of a tree and a branch or recension of the Vedas. Like the Vedic schools, these branches are endless and never perish. They reach even Brahmā's own world, where his swan and its mate shelter beside them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tītu aṟum peruñ cākaikaḷ taḻaikkiṉṟa ceyalāl
vētam eṉṉavum takuvaṉa; vicumpiṉum uyarnta;
āti aṇṭam muṉpu aḷittavaṉ ulakiṉ, aṅku avaṉ ūr
ōtimam taṉip peṭaiyoṭum puṭai iruntu uṟaiva.