கம்பராமாயணம் 3959 · கிட்கிந்தா 4.8

Section கிட்கிந்தா காண்டம் / 4. மராமரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காற்று அலம்பினும் - காற்று அசைத்தாலும், நாற்றம் மல்கு போது - நறுமணம் மிக்க மலர்களும்; அடை கனி காய் முதல் - இலைகளும், பழங்களும், காய்களும் முதலிய; நானா வீற்று யாவையும் - பலவகைப்பட்ட அனைத்தும்; மண் தலத்து - மண்ணுலகில்; யாண்டும் வீழ்கில- எவ்விடத்திலும் விழாதனவாய்; கலி நெடு வானிடை- ஆரவாரத்தை உடைய பெரிய வானுலகத்தில்; கலந்த - பொருந்திய; ஆற்றின் வீழ்ந்து போய் - ஆகாய கங்கையில் விழுந்து (அதன் வழியாகச் சென்று; அலைகடல் பாய்தரும் - அலைகளை உடைய கடலில் சேர்கின்ற, இயல்ப- தன்மையை உடையன.

இதனால் அம்மரங்கள் ஆகாய கங்கையினும் உயர்ந்துள்ளன என்றவாறு; உயர்வு நவிற்சி அணி. நாற்றம் - இங்கு நறுமணம், ஆறு - ஆகாய கங்கை. 'நறுமணம் மிக்க மலர் இலை, கனி, காய் முதலிய பல்வகைப்பட்ட அனைத்தும் எக்காலத்தும் வெவ்வேறு மண்டலங்களில் வீழ்வன அல்ல; காற்றடித்து வீழ்ந்தாலும் ஆரவாரமுடைய ஆகாயத்தில் பொருந்திய ஆகாய கங்கையில் விழுந்து கடலைச் சேர்வன' என்றும் இப்பாடலுக்கு விளக்கம் கூறுவர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Fragrant flowers, leaves, fruits, green fruit and every other
  2. kind of thing on them never falls anywhere on the earth;
  3. even when the wind shakes them, they fall into the river
  4. that runs across the vast, roaring sky, and go on into the wave-tossed sea.

What the poem says

Nothing that drops from these trees ever reaches the ground. Their crowns stand above the heavenly Gaṅgā, the river of the sky, so their flowers and fruit fall into it and are carried down to the sea. Another reading takes the verse to mean that wherever the wind blows them, they end in that sky-river.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāṟṟam malku pōtu, aṭai, kaṉi, kāy mutal nāṉā
vīṟṟu, maṇtalattu, yāvaiyum, vīḻkila, yāṇṭum,
kāṟṟu alampiṉum, kali neṭu vāṉiṭaik kalanta
āṟṟiṉ vīḻntu pōy, alai kaṭal pāytarum iyalpa.