கம்பராமாயணம் 3960 · கிட்கிந்தா 4.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அடியினால் - தன் திருவடியினால், உலகு அளந்தவன் - உலகங்களை அளந்தவனான திருமாலின்; அண்டத்துக்கு அப்பால் - அண்டத்திற்கு அப்பால் உள்ள; முடியின் மேல் சென்ற - உச்சி முகட்டின் மேலாக வளர்ந்து சென்ற; முடியன ஆதலின் - உச்சியினை உடையன ஆதலால், முடியா - அளவிட முடியாத; நெடிய மால் எனும் - (விக்கிரமாவதாரங் கொண்ட) நெடிய திருமால் என்று சொல்லத் தக்க; நிலையன- நிலைமையை உடையன. நீர் இடைக் கிடந்த - கடல் நீரில் கிடந்த - படியின் மேல் நின்ற- பூமியின் நடுவில் நிற்கின்ற; மேரு மால் வரையினும் - பெரிய மேருமலையைக் காட்டிலும்; பரிய- பருமையை உடையன.
மரங்கள் திருமாலுக்குரிய உலகினையும் கடந்து வளர்ந்து இருந்தமையால், அவை திரிவிக்கிரமனாய் வளர்ந்த திருமாலை ஒத்து விளங்கின. திரிவிக்கிரமனின் பெருமையை 'படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று, அடிவட்டத்தால் அளப்ப நீண்ட - முடிவட்டம், ஆகாயம் ஊடறுத்து அண்டம் போய் நீண்டதே, மாகாயமாய் நின்ற மாற்கு' என்று பாடுவர் பேயாழ்வார் (மூன்றாந் திருவந்தாதி - 13) நீரிடைக் கிடந்தபடி - நீரிடத்தில் தோன்றிய பூமி என்பதன் பொருள். பூமியின் நடுவில் பொன்மயமாய் மேருமலை நிற்பதாகவும் சூரியன் உதயமும் மறைவும் அம்மலையால் ஏற்படுகின்றன என்றும் பௌராணிகர் உரைப்பர் அத்தகைய மேருமலையினும் பரிய எனக் கூறி மரங்களின் பருமை உணர்த்தப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because their crowns have risen above the head of the one
- who measured the worlds with his foot, beyond the cosmos itself,
- they stand like boundless, towering Māl; they are broader even than
- great Mount Mēru, which stands on the earth that lies amid the waters.
What the poem says
As Trivikrama, Viṣṇu grew to cosmic size and measured the worlds in three strides; his head pierced the sky and passed beyond the universe. These trees rise even higher, so they are likened to that giant form. They are also thicker than Mēru, the golden mountain at the centre of the earth around which, the Purāṇas say, the sun rises and sets.