கம்பராமாயணம் 3964 · கிட்கிந்தா 4.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஓசை - அந்நாண் ஒலியானது; எவ் உலகமும் - எல்லா உலகங்களிலும்; அங்கு அங்கே - அவ்வவ் விடங்களிலே; ஒக்க நின்றது - ஒரே தன்மைத்தாய்ப் போய் பரவி நின்றது; பக்கம் நின்றவர்க்கு - (என்றால்) அருகில் நின்றவர்களுக்கு; உற்றது பகர்வது - ஏற்பட்ட நிலையைச் சொல்வது; எப்படியோ - எவ்வாறோ? திக்கயங்களும் மயங்கின - (அந்நாண் ஒலியால்) எட்டு திக்கு யானைகளும் மயக்கம் உற்றன; திசைகளும் திகைத்த - எல்லாத் திசைகளும் கலக்கம் அடைந்தன; அப்பொரு வில் - பொருதற்குரிய அந்த வில்லின் நாணொலி; அயன்பதி சலிப்புற - பிரமலோகம் அதிர்ச்சியடையும்படி; புக்கு ஒலித்தது - புகுந்து ஒலித்தது.
இதனால் நாணொலியின் மிகுதியைத் தெரிவித்தவாறு. சேய்மையில் உள்ள வெவ்வேறு உலகங்களில் ஒலித்த நாணொலி அவ்வவ்விடத்தில் தோன்றியது போலப் பேரோசை பெற்றிருந்தது என்றால், அருகில் நின்றவர்களுக்குக் கேட்ட ஓசையின் மிகுதி சொல்லுந்தரமன்று. மேலும் திக்கயங்களும் திசைகளும் கலங்க, அயன்பதியும் சலிப்புற ஒலித்தது என்றதால் ஒலியின் மிகுதியை அறியலாம். எப்படியோ - ஓகாரம் எதிர்மறை, எவ்வுலகமும் - உம்மை முற்று, திக்கயங்கள் - ஐராவதம், புண்டரீகம், வாமநம், குமுதம், அஞ்சநம், புஷ்பதந்தம், சார்வ பௌமம், சுப்ரதீகம் என்பன. நாண் ஒலியின் மிகுதியைக் குறித்ததால் தொடர்பு உயர்வு நவிற்சி அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sound stood alike in every world, in each place where it was;
- how could one tell what befell those standing near?
- The elephants of the directions swooned; the directions themselves were stunned;
- that battle-bow rang out and entered Brahmā's city, making it shake.
What the poem says
If the twang sounded as loud in the most distant worlds as if it had been made right there, the poet asks, how can anyone describe what it was like for those standing beside Irāmaṉ? The eight elephants that hold up the quarters of the world faint, and even Brahmā's heaven trembles.