கம்பராமாயணம் 3963 · கிட்கிந்தா 4.12

Section கிட்கிந்தா காண்டம் / 4. மராமரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அமலன்: குற்றமற்றவனாகிய இராமன்; ஆய மாமரம் அனைத்தையும்- அத்தன்மையனவான பெரிய மராமரங்கள் யாவற்றையும்; நோக்கி நின்று - பார்த்து நின்று; தூய வார் கணை - தூய்மையான நீண்ட தன் அம்பை; துரப்பது - செலுத்துதற்கு ஏற்ற; ஓர் ஆதரம் தோன்ற - ஒரு விருப்பம் உண்டாக; சேய வானமும் திசைகளும் - நெடுந்தொலைவில் உள்ள வானத்திலும் எல்லாத் திசைகளிலும் உள்ள உயிர்கள்; செவிடு உற - செவிடு படவும்; தேவர்க்கு - தேவர்களுக்கு; ஏய்வு இலாதது ஓர் - (இதுகாறும்) ஏற்படாததொரு; பயம் வர - அச்சம் உண்டாகுமாறும்; சிலையின் - வில்லில் பூட்டிய; நாண் எறிந்தான் - நாணைத் தெறித்து ஓசையை எழுப்பினான்.

இங்கு நாணின் ஒலிச் சிறப்புக் கூறப் பெற்றது. சுக்கிரீவனுக்குத் தன் வலிமையைக் காட்ட, ஏழு மரங்களையும் ஒரே அம்பால் ஒரு சேரத் துளைக்க விரும்பி வானமும் திசைகளும் செவிடுபட, தேவர்கள் நடுங்க இராமபிரான் நாணொலி எழுப்பினான் என்பதாம். தீயவர்களை அழித்தலும், குறித்த இலக்குத் தப்பாமையும் கணைக்குத் தூய்மையாகும். தேவர்கள் முன் கேட்டிராத நாணொலி யாதலின் அச்சம் எய்துவர் என்பதால் 'ஏய்வு இலாததோர் பயம் வர' என்றார். தூய, சேய - குறிப்புப் பெயரெச்சங்கள், வானம், திசை - இடவாகு பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Standing and looking at all those great trees, the Pure One,
  2. with a wish rising in him to loose his pure, long arrow,
  3. so that the far sky and the directions were deafened and the gods
  4. felt a fear they had never known, twanged the string of his bow.

What the poem says

Wanting to show Cukkirīvaṉ his power by piercing all seven trees with a single shot, Irāmaṉ first plucks his bowstring. The twang deafens the whole sky and terrifies the gods, who have never heard such a sound. An arrow is "pure" because it destroys only the wicked and never misses its mark.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āya mā maram aṉaittaiyum nōkki niṉṟu, amalaṉ,
tūya vār kaṇai turappatu or ātaram tōṉṟa
cēya vāṉamum, ticaikaḷum ceviṭu uṟat tēvarkku
ēyvu ilātatu ōr payam varac cilaiyiṉ nāṇ eṟintāṉ.