கம்பராமாயணம் 3962 · கிட்கிந்தா 4.11

Section கிட்கிந்தா காண்டம் / 4. மராமரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '',
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1சென்று திக்கினை அளந்தன ; `'பணைகளின் '' , தேவர் ,
`'என்று நிற்கும் '' என்று இசைப்பன ; இரு சுடர் திரியும்
குன்றினுக்கு உயர்ந்து அகன்றன ; ஒன்றினுங் குறுகா ;
ஒன்றினுக்கு ஒன்றின் இடை , நெடிது யோசனை உடைய .

பொருள் · Meaning in Tamil

பணைகளின் - கிளைகளால், சென்று - (அம்மரங்கள்) வளர்ந்து போய்; திக்கினை அளந்தன - எல்லாத் திசைகளையும் அளந்தன; என்றும் நிற்கும் என்று - எக்காலத்தும் அழியாமல் நிற்பவை என்று; தேவர் - தேவர்களால்; இசைப்பன - சொல்லத்தக்கன; இருசுடர் - சூரிய சந்திரர்; திரியும் குன்றினுக்கு - வலம் வரும் மேருமலையை விட; உயர்ந்து, அகன்றன - உயர்ந்தும், அகன்றும் விளங்கின; ஒன்றினும் குறுகா - ஒரு வகையிலும் குறைவு படாதன; ஒன்றினுக்கு ஒன்றின் இடை - ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடையிலே; நெடிது யோசனை உடைய - பல யோசனை தூரம் இடைவெளி உள்ளவை.

உயர்ந்தும் பரந்தும் வளர்ந்த மரங்கள் நெருக்கமாக இன்றி இடைவெளி விட்டு வளர்ந்திருக்கின்றன. திக்கினை அளந்தன என்பதற்குத் திசைகளின் எல்லை அளவும் பரந்துள்ளன என்பது பொருள் யோசனை ஓரெல்லை அளவைக் குறிக்கும். நான்கு காததூரம் என்றுகூறுவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Spreading out with their branches, they measured the directions; the gods
  2. praise them as things that will stand forever; they rose higher and wider
  3. than the mountain round which the two lights circle; in nothing are they less;
  4. and between one and the next lie many long leagues.

What the poem says

The trees reach to the ends of the directions and outdo even Mēru, around which the sun and moon travel. They do not stand close together; each is many leagues from the next. The league here is the yōcaṉai, said to be four kātam.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceṉṟu tikkiṉai aḷantaṉa; `'paṇaikaḷiṉ '', tēvar,
`'eṉṟum niṟkum '' eṉṟu icaippaṉa; iru cuṭar tiriyum
kuṉṟiṉukku uyarntu akaṉṟaṉa; oṉṟiṉum kuṟukā;
oṉṟiṉukku oṉṟiṉ iṭai, neṭitu yōcaṉai uṭaiya.