கம்பராமாயணம் 3969 · கிட்கிந்தா 4.18

Section கிட்கிந்தா காண்டம் / 4. மராமரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்னது ஆயினும் - அவ்வாறு அச்சம் உண்டானாலும், அறத்தினுக்கு- (இராமன்) அறத்திற்கு; ஆர் உயிர்த் துணைவன் - அரிய உயிர்த் துணைவனாய் இருப்பான்; என்னும் தன்மையை - என்னும் இயல்பை; யாவரும் எவையும் - எல்லோரும் யாவையும், நோக்கினர் - நோக்கி அச்சம் நீங்கினர்; பொன்னின் வார்கழல் - (அப்பொழுது) பொன்னால் ஆகிய நீண்ட வீரக்கழல் அணிந்த; புது நறுந்தாமரை - அன்றலர்ந்த நறுமணமிக்க தாமரை மலர்போன்ற இராமன் திருவடிகளை; பூண்டு - ஏற்று; சென்னி மேல் கொளூஉ - தலைமேல் கொண்டு; அருக்கன் சேய் - சூரியன் மகனான சுக்கிரீவன்; இவை இவை செப்பும் - இன்னின்ன வார்த்தைகளைச் சொல்லலானான்.

இராமன் அறம் அல்லதைச் செய்யான் என்ற நம்பிக்கையால் அவர்களது அச்சம் நீங்கியது. அவன் அறத்திற்குத் துணையாயிருப்பவன், அறத்தை நிலை நாட்ட வல்லன் என்பதை "அறம் தரு வள்ளல்" "மெய்யற மூர்த்தி", அறந்தரு சிந்தை என் ஆவி நாயகன்" என்னும் தொடர்களும் (3372, 5882, 5102) உணர்த்தும். "உண்டு எனும் தருமமே உருவமா உடையநிற் கண்டு கொண்டேன்" (4060). 'அறைகழல் இராமனாகி அறநெறி நிறுத்த வந்தது" (4073) என்னும் வாலியின் கூற்றும் ஒப்பு நோக்கத்தக்கன. யாவரும் எவையும் நோக்கினர்: உயர்திணையோடு சேர்ந்த அஃறிணைப் பொருளும் உயர்திணை வினை கொண்டது. கழல் தாமரை - கழலணிந்த தாமரை போன்ற அடி. இஃது இல்பொருள் உவமை. தாமரை இங்கு உவமை ஆகுபெயர் கொளூஉ - செய்யூ என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சம்; இவை, இவை - அடுக்குத் தொடர்; மிகுதியும் பல் வகைமையும் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even so, everyone and everything looked to the fact
  2. that he is the dear life-companion of dharma, and took heart; then the Sun's son
  3. took those fresh, fragrant lotuses, the feet bearing long golden anklets,
  4. and set them on his head, and spoke these words and more.

What the poem says

The fear passes once everyone remembers that Irāmaṉ is the very ally of dharma and will never do wrong. Cukkirīvaṉ, son of the Sun, places Irāmaṉ's feet, like fresh lotuses wearing golden warrior's anklets, on his own head in worship and begins to praise him. Vālī himself will later call Irāmaṉ dharma in bodily form.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉatu āyiṉum, aṟattiṉukku ār uyirt tuṇaivaṉ
eṉṉum taṉmaiyai nōkkiṉar yāvarum, evaiyum;
poṉṉiṉ vār kaḻal putu naṟun tāmarai pūṇṭu,
ceṉṉimēl koḷūu, arukkaṉ cēy ivai ivai ceppum.