கம்பராமாயணம் 3970 · கிட்கிந்தா 4.19

Section கிட்கிந்தா காண்டம் / 4. மராமரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1” வையம் நீ ! வானும் நீ ! மற்றும் நீ ! மலரின் மேல்
ஐயன் நீ ! ஆழிமேல் ஆழிமா மாலும் நீ !
செய்யன் நீ ! வினை தெறும் தேவும் நீ ! நாயினேன்
உய்ய வந்து உதவினாய் , உலகம் முந்து உதவினாய் ! ''

பொருள் · Meaning in Tamil

வையம் நீ - நிலமும் நீயே! வானும் நீ - ஆகாயமும் நீயே! மற்றும் நீ - ஒழிந்த பூதங்களாகிய நீர் காற்று, தீ என்பனவும் நீயே! மலரின் மேல் ஐயன் நீ - தாமரை மலரின் மேல் விளங்கும் பிரமதேவனும் நீயே! ஆழிமேல் - பாற்கடல் மேல் பள்ளி கொண்ட! ஆழிவாய் கையன் நீ - சக்கரப்படை தாங்கிய கையுடைய திருமாலும் நீயே! செய்ய தீ அனைய - சிவந்த நெருப்பினை ஒத்த; அத்தேவும் நீ - அந்த சிவபிரானும் நீயே! உலகம் முந்து உதவினாய் - உலகங்களை எல்லாம் முற்காலத்தில் படைத்தருளினாய், நாயினேன் உய்ய - நாய் போன்றவனாகிய நான் நற்கதி அடையும் பொருட்டு; வந்து உதவினாய் - என்னை நாடி வந்து அருள் புரிந்தாய்.

இராமனின் வில்லாற்றலை நேரில் கண்ட சுக்கிரீவன் 'இவன் அனுமன் கூறியாங்கு முழுமுதற் கடவுளாகிய திருமாலின் அவதாரமே' எனத் தெளிந்து இராமனைப் பலவாறு போற்றலாயினன். இராமன் மும்மூர்த்தியாய் விளங்கும் பரம்பொருளே என்பதைத் தண்டகாரணியத்து முனிவர்கள், விராதன், இந்திரன், கவந்தன், சவரி, வாலி ஆகியோர் இராமனைப் போற்றும் பாடல்களில் காணலாம். வையம் நீ, வானும் நீ எனப் பஞ்சபூதங்களுள் முதலதையும், இறுதியதையும் கூறிப் பிறவற்றை 'மற்றும்' என்பதனால் பெற வைத்தார். 'நாயினேன்' என்றதில் சுக்கிரீவன் அடக்கம் புலனாகிறது. இறைவனின் கருணைத் திறத்தை 'வந்து உதவினாய்' என்ற தொடர் உணர்த்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "You are the earth! You are the sky! You are all the rest!
  2. You are the lord upon the flower! You are the one who lies upon the sea, the discus in your hand!
  3. You are the red one, the god who destroys deeds! To save me, a dog,
  4. you came and helped; you helped the world from the very first!"

What the poem says

Now certain, as Aṉumaṉ said, that Irāmaṉ is the supreme god, Cukkirīvaṉ praises him as everything. He is the elements, naming earth and sky and implying the rest. He is all three gods: Brahmā on the lotus, Viṣṇu lying on the ocean with his discus, and the fiery red Śiva. He made the world in the beginning, and has now come in person to help one as lowly as a dog. Sages, Virātaṉ, Intiraṉ, Kavantaṉ, Cavari and Vālī all praise Irāmaṉ in the same way.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1”vaiyam nī! vāṉum nī! maṟṟum nī! malariṉmēl
aiyaṉ nī! āḻimēl āḻi vāḻ kaiyaṉ nī!
ceyyaṉ nī! viṉai teṟum tēvum nī! nāyiṉēṉ
uyya vantu utaviṉāy, ulakam muntu utaviṉāy! ''