கம்பராமாயணம் 3971 · கிட்கிந்தா 4.20

Section கிட்கிந்தா காண்டம் / 4. மராமரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1`'என் எனக்கு அரியது , எ பொருளும் என்கு எளிதலால் ?
உன்னை இ தலை விடுத்து உதவினார் விதியினார் ;
அன்னை ஒப்புடைய உன் அடியருக்கு அடியன் யான் ,
மன்னவர்க்கு அரச ! '' என்று உரை செய்தான் வசை இலான் .

பொருள் · Meaning in Tamil

மன்னவர்க்கு அரச - அரசர்களுக்கு அரசனே! விதியினார் - (முற்பிறப்பில் யான் செய்த) நல்லூழானது; உன்னை இத்தலை விடுத்து - உன்னை இவ்விடத்தே கொண்டு வந்து; உதவினார் - (எனக்கு) அளித்தது; எப்பொருளும் எற்கு - எந்த காரியமும் எனக்கு; எளிது அலால் - (செய்து முடித்தற்கு) எளிதாகுமேயன்றி; எனக்கு அரியது என் - எனக்குச் செய்வதற்கு அரிதாக இருக்கக் கூடியது யாது உளது? அன்னை ஒப்புடைய - (அதனால்) தாய்க்கு நிகரான; உன் அடியருக்கு - உனது அடியார்களுக்கு; அடியென் யான் - யான் அடியவனாவேன்; என்று - என்று; வசைஇலான் - பழியற்றவனாகிய சுக்கிரீவன்; உரைசெய்தான் - உரைத்தான்.

தனது ஊழ்வினை, பரம்பொருளாகிய இராமனைத் தன்னிடத்தில் சேர்த்து விட்டதனால் தனக்குச் செயற்கரியதாக எந்தச் செயலும் இல்லை என மகிழ்ந்த சுக்கிரீவன், இராமன் பெருமையை உணர்ந்தவனாய் இங்ஙனம் போற்றலாயினன். ஊழ்வினை தனக்குச் செய்த நன்மை கருதி 'விதியினார்' என்று பலர்பால் விகுதி கொடுத்துக் கூறினான். இது திணை வழுவமைதியோடு எண் வழுவமைதியும் ஆகும். "அடியருக்கு அடியென்' - 'யான் இனி உன் அடியார்க்கு அடியனாய் இருந்து பணிபுரிவேன்" என்பதைச் சுக்கிரீவன் புலப்படுத்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "What is hard for me now? Is not everything easy for me?
  2. Fate has sent you here and helped me;
  3. I am the servant of your servants, who are like a mother to me,
  4. King of kings!" said the blameless one.

What the poem says

Cukkirīvaṉ feels that the good karma of his past has brought the supreme being to his side, so nothing is now beyond him. He gives Fate a respectful plural out of gratitude. He vows to serve even Irāmaṉ's devotees, whom he calls dear as a mother.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1`'eṉ eṉakku ariyatu, epporuḷum eṟku eḷitu alāl?
uṉṉai it talai viṭuttu utaviṉār vitiyiṉār;
aṉṉai oppuṭaiya uṉ aṭiyarukku aṭiyaṉ yāṉ,
maṉṉavarkku araca! '' eṉṟu uraiceytāṉ vacai ilāṉ.