கம்பராமாயணம் 3973 · கிட்கிந்தா 5.1

Section கிட்கிந்தா காண்டம் / 5. துந்துபிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நெடும்பசை வறந்திடினும் - மிக்க ரத்தப்பசை வற்றியிருந்தாலும்; அண்டமும் - அண்ட கோளங்களும்; அகிலமும் - (அவற்றில் அடங்கிய) எல்லா உலகங்களும்; அடைய - ஒருங்கே; அன்று - அந்நாளில் (ஊழி முடிவில்); பண்டு- முன்னே; அனலிடை- ஊழித் தீயில்பட்டு; வெந்தன - வெந்தாற் போன்றதும்; வான் மண்டலம் தொடுவது - ஆகாய மண்டலத்தைப் போய்த் தொடுவதுமான; கடல் அனான் துந்துபி உடல்- கடல் போன்றவனான துந்துபி என்னும் அரக்கனின் உடல்; அம்மலையின் மேல் - அந்த ருசியமுக மலையின் மீது; மலை என - மற்றொரு மலை போல் கிடப்பதை; கண்டனன் - இராமன் கண்டான்.

ஊழிக்கால இறுதியில் அண்டங்களும் உலகங்களும் வெந்ததை ஒத்தும், மலையின் மேல் மற்றொரு மலை இருப்பது போன்றும், வான மண்டலத்தைத் தொட்டும் கடல்போல் பரந்தும் துந்துபியின் உடலின் எலும்புக்கூடு கிடந்தது என்க. பசை வறந்திடினும் தோல், நிணம், தசை முதலியவற்றுடன் இருந்த நிலையில் அரக்கன் உடலின் பருமனும், உயரமும், வலிமையும் எங்ஙனம் இருக்குமோ என்பதை உணர வைத்தது. 'பசை வறந்திடினும்' என்னுந் தொடர் மத்திம தீபமாய் முன்னும் பின்னும் இயையும். துந்துபி - துந்துபி என்னும் பேரிகை போல் பெருமுழக்கம் செய்பவன். ஆரவாரம், பெருமை, கருமை காரணமாகத் துந்துபிக்குக் கடல் உவமை ஆயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if the cosmos and all the worlds together had once
  2. been burned up in the fire, even though its rich juices had long dried away, touching the sky's
  3. vault, like a mountain upon that mountain,
  4. he saw the body of Tuntupi, who had been like the sea.

What the poem says

A new canto begins. Long ago Vālī killed Tuntupi, son of Mayaṉ, and hurled his body onto Mount Iruciyamukam, near the hermitage of the sage Mataṅkar. The sage cursed Vālī for defiling the place, which is why Vālī can never come there.

Irāmaṉ now sees the dried-out skeleton. Even with all its flesh and blood gone, it is a mountain on top of the mountain, reaching the sky and charred-looking, like the worlds after the fire at the end of an age. One can only imagine how huge Tuntupi was alive. His name means "kettledrum", for his roar.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṭamum akilamum aṭaiya aṉṟu aṉaliṭai
paṇṭu ventaṉa neṭum pacai vaṟantiṭiṉum, vāṉ
maṇṭalam toṭuvatu, am malaiyiṉmēl malai eṉak
kaṇṭaṉaṉ, tuntupik kaṭal aṉāṉ uṭal, arō.