கம்பராமாயணம் 3974 · கிட்கிந்தா 5.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இது - இந்த வறண்ட உடல்; தென்புலக் கிழவன் - தெற்குத் திசைக்குத் தலைவனான யமன்; ஊர் மயிடமோ - வாகனமாக ஏறிச் செலுத்துகின்ற எருமைக் கடாவோ? திசையின் வாழ் - திசைகளில் வாழ்கின்ற; வன்பு உலக் கரி - வலிமை பொருந்திய கல் போன்ற யானைகளுள் ஒன்று; மடிந்தது கொலோ - மடிந்து கிடக்கிறதோ? மகர மீன் - மகரம் என்னும் பெரிய மீன்; உலப்பு உற - இறந்து படி; என்பு உலர்ந்தது கொலோ - அதன் எலும்பு உலர்ந்து கிடக்கின்றதோ? எனா - என்று வியந்து; அன்பு உலப்பரிய நீ - அன்பு குறைவுபடாதவனாகிய நீ; உரை செய்வாய் - சொல்வாய்; என - என்று (இராமன் கேட்க); அவன் - அந்தச் சுக்கிரீவன். . .
'அவன்' என்னும் சுட்டுப் பெயர் பதினான்காம் பாடலில் 'உரை செய்தான்' என்பதனோடு முடியும். மகரம் - சுறா எனும் மீன். இது மரக்கலத்தையும் கவிழ்க்க வல்லது. உலம் திரண்டகல்; கொலோ - கொல் ஐயப்பொருள் இடைச்சொல். துந்துபியின் எலும்புக் கூட்டைப் பல வகையாய் ஐயமேற் கொண்டு கூறியதாதலின் ஐய அணியின் பாற்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Is it the buffalo ridden by the lord of the southern realm? Is it
- one of the rock-hard elephants that live at the quarters, fallen dead? Is it
- a makara fish dead and dried to bones?" he said;
- "Tell me, you whose love never fails." And he...
What the poem says
Irāmaṉ marvels at the carcass and guesses at what it might be: the buffalo that Yama, lord of the south, rides; one of the elephants that guard the directions; or the bones of a makara, a sea monster able to overturn ships. Piling up guesses like this is the figure of doubt. The sentence "And he..." is completed many verses later, when Cukkirīvaṉ finishes his story.