கம்பராமாயணம் 3975 · கிட்கிந்தா 5.3

Section கிட்கிந்தா காண்டம் / 5. துந்துபிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

மீது இந்துவைத் தொட - மேலே (வானில்) உள்ள சந்திரனைத் தொடும்படியாக; நிமிர்ந்து எழு - மேலெழுந்து வளர்ந்துள்ள; மருப்பு இணையினான் - இரண்டு கொம்புகளை உடையவனும்; மந்தரக்கிரி எனப் பெரியவன் - மந்தர மலை போன்ற பெரிய உருவத்தை உடையவனுமான; துந்துபிப் பெயருடை - துந்துபி என்னும் பெயருடைய, சுடு சினத்து அவுணன் - தீப்போல் சுடுகின்ற கோபத்தை உடைய அசுரன்; மகர நீர் சிந்திட - கடலில் உள்ள நீர் சிதறும் படியாக; கரு நிறத்து அரியினை - கரிய நிறத்தை உடைய திருமாலை; தேடுவான் - தேடிச் சென்றான்.

முன் பாடலில் 'மயிடமோ' என்றதாலும் இங்கு 'மருப்பிணையினான்' என்றதாலும் 'துந்துபி' எருமை வடிவினன் என்பது புலனாகும். 'மகரநீர் சிந்திட' என்றதால் கடலைக் கலக்கிக் கொண்டு தேடினான்' என்பது துல தை எருமையின் இயல்பிற்கேற்ப நீரைக் கலக்கினான் என அறியலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "A demon named Tuntupi, of burning anger,
  2. with a pair of horns that rose up to touch the moon,
  3. huge as Mount Mantaram, went searching
  4. for dark-hued Ari, churning the waters of the sea."

What the poem says

Cukkirīvaṉ begins Tuntupi's story. The horns and the earlier guess of a buffalo show that Tuntupi had the shape of a buffalo. Like a buffalo wallowing, he churned up the ocean as he searched it for dark Viṣṇu (Ari), whom he wanted to fight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tuntupip peyaruṭaic cuṭu ciṉattu avuṇaṉ, mītu
intuvait toṭa nimirntu eḻu maruppu iṇaiyiṉāṉ,
mantarak kiri eṉap periyavaṉ, makara nīr
cintiṭak karu niṟattu ariyiṉait tēṭuvāṉ. '