கம்பராமாயணம் 3976 · கிட்கிந்தா 5.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அங்கு - அவ்விடத்தில்; அரி வந்து எதிர்ந்து - திருமால் எதிரில் வந்து; அமைதி என் என்றலும் - 'நீ இங்கு வந்த காரணம் யாது' என்று வினவிய அளவில்; பொங்கு வெஞ் செருவினில் - சீற்றம் கொண்டு செய்கின்ற கொடிய போரில்; பொருதி என்று உரைசெய - 'என்னோடு போர் செய்வாயாக என்று துந்துபி கூற; கங்கையின் கணவன் - (அதற்குத் திருமால்) 'கங்கா தேவியின் கணவனான; அக்கறை மிடற்று இறைவனே - நஞ்சுண்டதால் கறுத்த கண்டத்தை உடைய அந்தச் சிவபெருமானே; உங்கள் வெம்கதம் வலிக்கு - உங்களைப் போன்றவர்களின் கோபமிக்க வலிமைக்கு, ஒருவன் - போரிடக்கூடிய ஒருவன் ஆவான்; என்று உரை செய்தான் - என்று உரைத்தான்.
வாலியால் துந்துபி கொல்லப்படவேண்டும் என்பது ஊழ்வினையாதலால், திருமால் அவனொடு போர் செய்து கொல்லாது இங்ஙனம் கூறினார் எனக் கொள்க. கங்கையைச் சிவபிரான் தன் தலையில் கொண்டமையால் 'கங்கையின் கணவன் எனப்பட்டான். இறைவனே ஏகாரம் பிரிநிலை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "When Ari came there and faced him and asked, 'What is your business?',
- he said, 'Fight me in a raging, fierce battle';
- and Ari replied, 'The husband of Gaṅgā, that lord with the stained throat,
- he alone is a match for the fierce, angry strength of such as you.'"
What the poem says
Viṣṇu does not take up Tuntupi's challenge, because it is fated that Vālī will kill him. Instead he sends him on to Śiva, the "husband of Gaṅgā" because he bears the river in his hair, whose throat is darkened by the poison he swallowed at the churning of the ocean.