கம்பராமாயணம் 3981 · கிட்கிந்தா 5.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அடித்தலம் எடுத்திடுதலால்- (அவர்கள்) கால்களைத் தூக்கி வைத்ததால் ; தீ விசும்புற எழுந்தது - நெருப்பு வானத்தை அடையுமாறு மேலெழுந்தது; முழக்கு - (அவர்கள் செய்த) ஆரவாரம்; நெடுந்திசை எலாம் போய் - நீண்ட திசைகளெங்கும் சென்று; எழுந்தது - ஒலித்தது; புகை - (அந்நெருப்பின் புகையும்; உடன் எழுந்தது - கூடவே பரவிற்று; தோய நல் புணரியும் - நீரினை உடைய நல்ல கடலும்; தொடர் தடங்கிரிகளும் - பெரிய மலைத் தொடர்களும்; சாய் அழிந்தன - அழகு கெட்டன.
தீ - அடிகள் படுவதால் ஏற்படும் உராய்வில் நிலத்தினின்று எழுந்தது. கடலும் மலையும் தன் நிலை கெட்டன என்பதால் போரின் கடுமை புலனாகும். தோயம் - நீர் 'எழுந்தது' என்ற சொல் ஒரே பொருளில் பலமுறை வந்ததால் இப்பாடல் சொற்பொருள்பின் வருநிலையணி அமைந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Fire rose up to the sky; over all the far directions
- the roar went out; smoke rose with it;
- the good sea full of water and the great ranges of mountains
- were ruined, as they lifted and stamped their feet."
What the poem says
The very friction of their feet striking the ground sends up fire and smoke, and their trampling wrecks the seas and the mountain ranges. The word "rose" is repeated in the Tamil for effect.