கம்பராமாயணம் 3980 · கிட்கிந்தா 5.8

Section கிட்கிந்தா காண்டம் / 5. துந்துபிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் ; எவ் உலகமும்
வெருவரும் தகையர் ஆய்விழுவர் , நின்று எழுவரால் ;
மருவ அருந் தகையர் , தானவர்கள் வானவர்கள் தாம் . '

பொருள் · Meaning in Tamil

இருவரும்- வாலி, துந்துபி ஆகிய இருவரும்; திரிவுறும் பொழுதின் - இடசாரி, வலசாரியாகச் சுழலும் போதில்; இன்னவர்கள் என்று - இவர்கள் இன்னார் என்று; ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் - எவரும் சிறிதும் அறிந்திலர்; எவ் உலகினும் - எந்த உலகிலும்; வெருவரும் தகைவு இலர் - (எவரைக் கண்டும்) அஞ்சும் தன்மையில்லாத இவர்கள்; விழுவர் - கீழே விழுவார்கள்; நின்று எழுவர் - (மீண்டும்) எழுந்து நிற்பார்கள்; தானவர் - அசுரர்களும்; வானவர்கள் தாம் - தேவர்களும்; மருவ அருந்தகையர் - அருகே நெருங்கவும் முடியாத தன்மையினர் ஆயினர்.

இன்னவர்கள் என்று சிறிதும் உணர்ந்திலர்கள் - இவன் தான் வாலி, என்றும் இவன் தான் துந்துபி என்றும் அறிய முடியாமையை உணர்த்திற்று. அவ்விருவரின் உருவத்தின் பெருமையாலும் போரிடும் வேகத்தாலும் இட, வலமாகச் சுழல்வதாலும் அடையாளம் தெரிந்திலது. உணர்ந்திலர்கள்- விகுதி மேல் விகுதி (அர், கள்). துந்துபியின் இனத்தவர் ஆதலின் 'தானவர் முன்னர்க் கூறப்பட்டனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "As the two whirled about, no one could tell even a little
  2. which of them was which; they, who fear no one in any world,
  3. would fall and stand up again; neither the demons nor the gods
  4. could come anywhere near them."

What the poem says

The fighters are so huge and spin around each other so fast that no one can tell Vālī from Tuntupi. They go down and get up again, and neither gods nor demons dare approach. The demons are named first because Tuntupi is one of them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iruvarum tirivuṟum poḻutiṉ iṉṉavarkaḷ eṉṟu
oruvarum ciṟitu uṇarntilarkaḷ; ev ulakiṉum
veruvarum takaivuilar viḻuvar, niṉṟu eḻuvarāl;
maruvaaruntakaiyar, tāṉavarkaḷ vāṉavarkaḷtām. '