கம்பராமாயணம் 3983 · கிட்கிந்தா 5.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அற்றது ஆகிய- அத்தன்மைத் தான; செருப் புரிவுறும் அளவினில்- போரினைச் செய்கின்ற பொழுதில்; கொற்ற வாலியும் - வெற்றியை உடைய வாலியும்; குலவு தோள் வலியொடும் - திரண்ட தன் தோள்களின் வலிமையோடு; அவன் - அவ்வரக்கனது; ஆசையின் நெடும் பணை மருப்பு இணை - திசைகளை அளாவி நீண்ட பருத்த இரண்டு கொம்புகளையும்; பற்றி- பிடித்து; பறித்து - பிடுங்கி எடுத்து; எற்றினான் - அவற்றைக் கொண்டே அவனை அடித்தான்; அவனும் - அவ்வரக்கனும்; வான் இடியின் - வானில் உண்டாகும் இடியைப் போல, நின்று உரறினான் - முழங்கி நின்றான்.
இருவரும் வெற்றி தோல்வியின்றிப் பொருது வருகையில் வாலி வலிமை மிக்கவனாய், அவ்வரக்கனது கொம்புகளைப் பிடுங்கி அடிக்க, அவன் வலி தாளாது முழக்கமிட்டான். கொம்புகளை வேரொடு பறித்ததால் ஏற்பட்ட துன்பமும் அடிபட்டதால் நேர்ந்த துன்பமும் சேர அரக்கன் கலங்கிக் கதறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "As that battle went on, victorious Vālī
- with all the strength of his rounded shoulders
- seized his pair of long, thick horns that reached the directions, tore them out
- and beat him with them; and he stood roaring like thunder in the sky."
What the poem says
After long, even fighting, Vālī gets the upper hand. He wrenches out Tuntupi's two huge horns by the roots and beats him with them, and the demon bellows like thunder from the double pain.