கம்பராமாயணம் 3984 · கிட்கிந்தா 5.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தலையின் மேல் அடிபட - தலை மீது அடிபடும் படியும்; கடிது சாய் நெடிய தாள் - விரைவில் விழுந்து நீண்ட கால்கள்; உலைய - ஒடியும் படியும்; முழை வாய் திறந்து - மலைக்குகை போன்ற வாய் திறந்து; உதிர ஆறு ஒழுக - குருதி ஆறு பெருகவும், மா மலையின் மேல் - பெரிய மலையின் மீது; உரும் இடித்தென்ன - இடி இடித்தாற் போன்று; வான் மண்ணொடும் குலைய - விண்ணுலகமும் நிலவுலகமும் நடுங்கவும்; மாதிசைகளும் செவிடுற - பெரிய திசைகள் எல்லாம் செவிடுபடவும்; குத்தினான் - குத்தினான்
விண்ணுலகமும் மண்ணுலகமும் நடுங்க, திசைகள் செவிடுபட, அசுரன் கால் ஒடிந்து விழ, வாய்வழியே குருதி பெருக்கெடுத்தோட, மலைமீது இடி விழுந்தாற்போல அவ்வரக்கன் தலைமேல் வாலி குத்தினான் என்பது பொருளாகும். வாலி கொடுத்த குத்தின் வலிமை இதனால் புலப்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "So that the blow fell on his head, his long legs gave way and he fell
- and broke, and his cave of a mouth gaped open with a river of blood flowing;
- like a thunderbolt striking a great mountain, so that sky and earth
- shook and the great directions were deafened, he punched him."
What the poem says
Vālī's fist comes down on Tuntupi's head like a thunderbolt on a mountain. The demon's legs buckle, blood pours from his mouth, and heaven and earth shake.