கம்பராமாயணம் 3985 · கிட்கிந்தா 5.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இங்கு இது கவரி என - இவ்விடத்தில் வாலி கையில் கொண்டிருக்கின்ற இது சாமரம் ஆகும் என்று கண்டோர் கூறும்படி; கரதலம் கொடு - (வாலி துந்துபியை) கையினால் (எடுத்து); திரித்து இவர்தலும் - சுழற்றிக் கொண்டு உலாவியபொழுது; குருதி பட்டு இசைதொறும் - (அத்துந்துபியின்) இரத்தம் துளித்துப் படும்போதெல்லாம்; திசை தொறும் - ஒவ்வொரு திசையிலும் உள்ள; துணை பவர் நெடும்பணை - ஒன்றுக்கொன்று துணையாய் உள்ள நெருங்கிய நீண்ட தந்தங்களை உடைய, மதம் பயிலும் - மதம் பொழிகின்ற; வன் கரிகளே - வலிய யானைகள்; துவர் அணிந்தன என - சிவப்பு நிறம் பூசப்பட்டன போல; பொசி துதைந்தன - உதிரக் கசிவு அடர்ந்து படியப் பெற்றன.
வாலி துந்துபியைத் தூக்கிக் கையால் சுழற்ற, அவ்வரக்கனது வாயிலிருந்து சிந்திய இரத்தம் திசை யானைகள்மீது தெறித்து விழ, அவை செந்நிறம் பூசப்பட்டன போல விளங்கின என்பதால் எல்லாத் திசைகளிலும் அரக்கன் குருதிபட்டது என்பது புலனாகிறது. 'கவரி இங்கு இது என' என்பதற்கு இஃது ஓர் எருமை என்றெண்ணி' எனவும் பொருள் கொள்ளலாம். கவரி - சாமரையும், எருமையும் என இருபொருள்பட அமைந்த சொல்லாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "As he whirled him in his hand and strode about, as if to say 'This is a yak-tail fan',
- wherever the blood spattered, in every direction
- the mighty elephants with long tusks in pairs, streaming with must,
- were thickly smeared with it, as if painted red."
What the poem says
Vālī swings the giant carcass round his head as easily as a fly-whisk made from a yak's tail. Its blood sprays out to the ends of the earth and stains the elephants that guard the directions red. The word kavari means both a yak-tail fan and a buffalo, so the line can also be read as "thinking, this is just a buffalo".