கம்பராமாயணம் 3986 · கிட்கிந்தா 5.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவன் - அந்த வாலி; புயல் கடந்து - மேக மண்டலத்தைத் தாண்டி; இரவிதன் புகல் கடந்து - சூரியன் இருக்கும் இடத்தையும் தாண்டி; அயல் உளோர் இயலும் மண்டிலம் - மற்றைய தேவர்கள் பொருந்தி வாழ்கின்ற மண்டலங்களை; இகந்து - கடந்து; எனையவும் தவிர - மற்றும் எல்லா மேலிடங்களையும் கடக்கும்படி; வயிர வன் கரதலத்து - உறுதியான வலிய கையினால்; மேல் வலிந்து எறிய - (அவ்வரக்கனை மேலே வலிமையோடு வீச; அன்று - அப்பொழுது; உயிரும் விண் படர - அவன் உயிர் மேலுலகத்திற்குச் செல்ல; இவ்வுடலும் - இந்த உடலும்; இப்பரிசு- இவ்விதமாயிற்று. (கீழே விழுந்து இங்கே கிடந்தது).
"வாலி துந்துபி உடலை மேலே வீசி எறிய, அவன் உயிர் பிரிய, உடல் கீழே விழுந்தது என்றான். வான மண்டலங்கள் பலவற்றைக் கடந்து வீசப்பட்ட உடல் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Past the clouds, past the Sun's abode, past the spheres
- where the other gods dwell, leaving all else behind, upward
- he hurled him with his diamond-hard, mighty hand; and then
- his life went up to heaven, and this body came to be as you see."
What the poem says
Vālī flung the dead demon upward through the clouds, past the Sun and the spheres of the gods. Tuntupi's life went to heaven, while his body fell back down and lies here as this skeleton.