கம்பராமாயணம் 3990 · கிட்கிந்தா 6.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மேலை நாள் - முன்னொரு நாளில்; இவ்வழி யாம் - இந்த இடத்தில் நாங்கள்; இயைந்து இருந்தது ஓர்இடை - கூடியிருந்த ஒரு சமயத்தில்; வெவ்வழி இராவணன் - கொடிய வழியில் செல்பவனாகிய இராவணன்; கொணர - எடுத்து வரும் போது; நின் தேவியே கொலாம் - (அவன் கையகப்பட்டுச் செல்கின்றவள் நின் தேவியான சீதை தானோ? கழிந்த சேண் உளாள் - நெடுந்தூரத்தில் வானத்தில் உள்ளவளாய்; செவ்வழி நோக்கி - (இக்காடு, மலைகளில் உள்ள) நேரான வழியைப் பார்த்து; கவ்வையின் அரற்றினள் - துன்பத்தால் கதறி அழுதாள்.
நெடுந்தூரத்தில் வானத்தில் செல்பவளாக இருந்ததால் திருமேனி அடையாளம் கண்டு உறுதியாகக் கூற முடியாமையின் 'நின் தேவியே கொலாம்' என்றான். கண்ணுக்குத் தெளிவாகப் புலப்படவில்லையெனினும் அழுகை ஒலியால் பெண் என அறிய முடிந்தது. இப்போது அந்தப் பெண் சீதையாக இருக்கலாமோ என்று ஊகிக்கிறேன்' என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "One day, while we were gathered together in this place,
- as Irāvaṇaṉ of the cruel ways was carrying her off, long ago,
- looking down on the right path, one who was perhaps your queen,
- far off in the sky, cried out in anguish."
What the poem says
Cukkirīvaṉ tells how, some time ago, the monkeys saw Irāvaṇaṉ fly overhead carrying a woman who wept and looked down at the ground below. She was too far away to make out clearly, but they could tell from the crying that it was a woman. He says cautiously that it may have been Cītai.