கம்பராமாயணம் 3989 · கிட்கிந்தா 6.1

Section கிட்கிந்தா காண்டம் / 6. கலன்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆ இடை , அரி குலம் அசனி அஞ்சுற
வாய் திறந்து ஆர்த்தது ; வள்ளல் , ஓங்கிய
தூய நல் சோலையில் இருந்த சூழல்வாய் ,
'நாயக ! உணர்த்துவது உண்டு நான் ' எனா .

பொருள் · Meaning in Tamil

ஆயிடை - அப்பொழுது; அரிக்குலம் - குரங்குக் கூட்டம்; அசனி அஞ்சிட - இடியும் அச்சம் அடையுமாறு; வாய் திறந்து ஆர்த்தது - வாய்விட்டு ஆரவாரித்தது; வள்ளல் - இராமன்; ஓங்கிய தூய நல் சோலையில் - உயர்ந்த தூய்மையான அழகிய சோலையில்; இருந்த சூழல்வாய் - வந்து தங்கியிருந்த சமயத்தில்; நாயக - (சுக்கிரீவன் இராமனை நோக்கி) 'தலைவனே!' நான் உணர்த்துவது - நான் சொல்லவேண்டுவது; உண்டு எனா - (ஒன்று) உளது என்று -

'எனா' என்னும் வினையெச்சம் இப்படலத்தின் நான்காம் பாடலில் வரும். 'காட்டினன்' என்னும் வினைமுற்றைக் கொண்டு முடியும்.

மராமரங்களைத் துளைத்தும், துந்துபியை உந்தியும் தம் வலிமையைக் காட்டிச் சுக்கிரீவனுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளித்தமையால் மகிழ்ச்சி மிகுதியால் அரிக்குலம் வாய்திறந்து ஆர்த்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then the monkey host opened their mouths and roared so that
  2. even thunder was afraid; and while the generous one was
  3. resting in a lofty, pure and lovely grove,
  4. saying, "Lord, there is something I must tell you,"

What the poem says

A new canto, "Seeing the Jewels", begins. Thrilled by the two feats, the monkeys roar louder than thunder. Irāmaṉ rests in a grove, and Cukkirīvaṉ approaches him with something to show. His sentence runs on for several verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiṭai, arikkulam acaṉi añciṭa
vāy tiṟantu ārttatu; vaḷḷal, ōṅkiya
tūya nal cōlaiyil irunta cūḻalvāy,
'nāyaka! uṇarttuvatu uṇṭu nāṉ ' eṉā.