கம்பராமாயணம் 4003 · கிட்கிந்தா 6.15

Section கிட்கிந்தா காண்டம் / 6. கலன்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏவல் செய் துணைவரேம் யாங்கள் ; ஈங்கு இவன்
தா அரும் பெரு வலித் தம்பி ; நம்பி ! நின்
சேவகம் இது எனில் , சிறுக நோக்கல் என் ?
மூவகை உலகும் நின் மொழியின் முந்தும் ஓ .

பொருள் · Meaning in Tamil

நம்பி - ஆடவரில் சிறந்தவனே! யாங்கள் - நாங்கள்; ஏவல்செய் துணைவரேம் - நின் ஏவல் வழியில் பணி செய்யும் தோழர்களாக உள்ளோம்; ஈங்கு இவன் - இங்கே உள்ள இலக்குவனோ; தா அரும் பெரு வலித்தம்பி- அழித்தற்கரிய பெரிய வலிமை படைத்த தம்பியாக உள்ளான்; நின் சேவகம்- உனது வீரம்; இது எனில் - இத்தன்மைத்து என்றால்; சிறுக நோக்கல் என்- (உன்னை நி குறைபடக் கருதுவது ஏனோ? மூவகை உலகும் - மூன்றுஉலகங்களும்; நின் மொழியின் முந்துமோ - நின் கட்டளையைக் கடக்குமோ? (கடவாது.

ஏவிய பணியைச் செய்ய வானரர்கள் இருக்க, தம்பி அளத்தற்கரிய வலிமையுடையவனாய் அருகே இருக்க, உலகமேழும் தன் ஒரு கணைக்கு ஆற்றா வலிமை தன்னிடம் இருக்க, இராமன் வலியற்றான் போலவும், துணையில்லாதவன் போலவும் சோர்வடைதல் தகாது என்று சுக்கிரீவன் உரைத்தான் என்க. சேவகம் - வீரம். ஏழுமராமரங்களையும் ஓரம்பால் துளைத்த செயல் நினைந்து 'இது' எனப் பேசினான். வீரன் என்ற பொருளில் இராமனைச் 'சேவகன்' என்றே பல இடங்களில் கம்பர் கூறுவது காண்க. 'தீராய் ஒரு நாள் வலி சேவகனே என்ற சீதையின் கூற்றும் (5232) 'சேவகன்தேவி' என்ற அனுமன் உரையும் (5861) காண்க. துணைவரேம் - தன்மைப் பன்மை விகுதி பெற்று வந்தது; சிறுக நோக்கல்'- எளியவனாகப் பாவித்தல், மூவகை உலகு - விண், மண், பாதலம் என மூவகைப்பட்டன. உலகு - இடவாகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "We are your helpers who do your bidding; here is
  2. your brother of unconquerable might; noble one, if your
  3. valour is such as this, why think of yourself as small?
  4. Would the three kinds of worlds dare go against your word?"

What the poem says

Irāmaṉ has monkeys ready to obey him, a brother of boundless strength beside him, and power that the seven worlds could not withstand, as the arrow through the seven trees has just shown. He should not lose heart as though he were weak and alone. Heaven, earth and the underworld would all obey his command.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēval cey tuṇaivarēm yāṅkaḷ; īṅku ivaṉ
tā arum peru valit tampi; nampi! niṉ
cēvakam itueṉiṉ, ciṟuka nōkkal eṉ?
mūvakai ulakum niṉ moḻiyiṉ muntumō.