கம்பராமாயணம் 4004 · கிட்கிந்தா 6.16

Section கிட்கிந்தா காண்டம் / 6. கலன்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பெருமையோர் ஆயினார் , பெருமை பேசலார் ;
கருமமே அல்லது பிறிது என் கண்டது ?
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ ?
அருமை ஏது உனக்கு ? நின்று அவலம் கூர்தி ஓ ?

பொருள் · Meaning in Tamil

பெருமையோர் ஆயினும் - பெருமைக்கு உரியவர்கள் ஆனாலும்; பெருமை பேசலார் - தங்கள் பெருமையைத் தாங்களே பேச மாட்டார்கள்; கருமமே அல்லது - அவர்கள் தம் கடமையைச் செய்வதல்லது; பிறிது என் கண்டது - அறிந்தது வேறு என்ன? (ஒன்றுமில்லை; தருமம் நீ அல்லது - தருமம் என்பது உன்னையன்றி; தனித்து வேறு உண்டோ- தனியாக வேறொன்று உளதோ? (இல்லை); உனக்கு அருமை ஏது - உனக்குச் செய்தற்கரிய செயல் எது? (ஒன்றும் இல்லை), நின்று அவலம் கூர்தியோ - இவ்வாறாகவும், திகைத்து நின்று துயர் மிகுந்து வருந்தக் கடவையோ?

பெரியோர்கள் தம் ஆற்றலைச் செயலில் காட்டுவரே அன்றிப் பேசமாட்டார்கள். ஆதலின் இராமன் தன் பெருமையைச் செயலால் காட்ட வேண்டுமேயன்றி அவலம் கூர்தல் ஏற்றதன்று என்றான், சுக்கிரீவன். 'பணியுமாம் பெருமை' என்பதால் பெரியவர்கள் அடக்கத்தால் தம் பெருமையைத் தாமே பேசுதல் இல்லை. அவர்கள் சிந்தை காரியத்தில் மட்டுமே இருக்குமாதலின் அவர்கள் வேறு எதனையும் நோக்குதல் இல்லை. அனுமன் தன் பெருமை பேசாமையை 'விளம்பான் தான்தன் வென்றியை உரைப்ப வெள்கி' (6015) என்ற அடி உணர்த்தும். 'தருமமே நீ அல்லது வேறுண்டோ?' என்ற கருத்தை 'அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான்' (1249) என்ற வசிட்டர் கூற்றிலும், "உண்டு எனும் தருமமே உருவமா உடைய நின்கண்டு கொண்டேன்" (4066) என்ற வாலி கூற்றிலும் காண்க.

பெருமையோர் ஆயினும் - உயர்வு சிறப்பும்மை, கூர்தியோ என்பதில் 'கூர் மிகுதிப் பொருளை உணர்த்தும் உரிச்சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The great, though they are great, do not speak of their greatness;
  2. what else do they look to but the task in hand?
  3. Is there any dharma apart from you?
  4. What is hard for you? Will you stand here and sink in grief?"

What the poem says

The great show their worth by deeds, not words, Cukkirīvaṉ says, so Irāmaṉ should act rather than grieve. Irāmaṉ is dharma itself, as Vasiṣṭha (Vaciṭṭaṉ) and later Vālī also say, and nothing is beyond him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1perumaiyōr āyiṉum, perumai pēcalār;
karumamē allatu piṟitu eṉ kaṇṭatu?
tarumam nī allatu taṉittu vēṟu uṇṭō?
arumai ētu uṉakku? niṉṟu avalam kūrtiyō?